CM Vijay - Trisha: சங்கீதா இருந்திருக்க வேண்டிய இடம்.. த்ரிஷா வருகை.. ரசிகர்கள் அதிருப்தி
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகையும் விஜய்யின் நெருங்கிய தோழியுமான த்ரிஷா கலந்து கொள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டார். தேர்தல் முடிவுகள் தினத்தில் விஜய்யின் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தபோதே, வெற்றியைக் கொண்டாடவும் வாழ்த்தவும், த்ரிஷா உடனே விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்றார். இப்படி இருக்கையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள த்ரிஷா தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

இப்படி இருக்கையில் த்ரிஷாவின் இந்த வருகை குறித்து விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் த்ரிஷா கலந்து கொள்வதை விஜய் தவிர்க்கச் சொல்ல வேண்டும் என விஜய் ரசிகர்களே கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், இது சங்கீதா இருந்திருக்க வேண்டிய இடம் என்றும் பலரும் கூறுகிறார்கள். விஜய் சமீப காலமாகவே ஜோசியர் ஒருவருடன் அதிகம் பயணிப்பதால், த்ரிஷா விஜய் உடன் இருப்பதால்தான் முதலமைச்சர் பதவி சாத்தியமாகி உள்ளது என்றும் பலர் விமர்சித்து வருகிறார்கள். மொத்தத்தில் த்ரிஷாவின் வருகை விஜய் ரசிகர்கள், தவெகவினர் என பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications