CM Vijay: டக்கென காரை ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. ரசிகர்கள் இதையும் டிரெண்ட் ஆக்கறாங்கப்பா!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேராகத் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

அரசியல் களத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆன்மீகத்தின் அமைதியைத் தேடிச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு உலக நன்மைக்காகவும், குறிப்பாகத் தான் நேசிக்கும் தமிழக மக்களின் நலனுக்காகவும், வளமான வாழ்வுக்காகவும் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டார். அன்னை மூகாம்பிகையின் சன்னதியில் கைகூப்பி நின்று அவர் சாமி தரிசனம் செய்தார், வெறும் பக்திப் பயணமாக மட்டுமல்லாமல், தமிழக மக்களின் மீதான அவரது பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

CM Vijay Visits Kollur Mookambika Temple Viral Video of Him Driving Himself Trends

சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய போதுதான், அந்த சுவாரசியமான, யாரும் எதிர்பார்க்காத அதிரடிச் சம்பவம் அரங்கேறியது. நாட்டின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர் என்றாலே, அவரைச் சுற்றிப் பாதுகாப்பு அதிகாரிகளும், தனிப் படைகளும், சொகுசு காரின் பின் இருக்கை பயணமும் தான் நமக்கு பழகிப்போன ஒன்று. ஆனால், அங்கு கூடியிருந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக, தனது காரின் ஓட்டுநர் இருக்கையில் அவரே அமர்ந்தார்.

திரையில் பார்த்த தளபதி: சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் புடைசூழ நின்றிருக்க, எவ்வித பந்தாவும் இன்றி ஸ்டீயரிங்கை கையில் பிடித்து, புன்னகையோடு அவரே காரை எடுத்துச் சென்ற விதம், திரையில் பார்த்த 'தளபதி'யை மீண்டும் நிஜத்தில் பார்ப்பது போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும், எளிய மனிதனாகத் தனது செயல்களில் தனித்துவத்தைக் காட்டும் அவரது இந்த குணம், அவரை ஒரு வித்தியாசமான முதலமைச்சராகக் காட்டுகிறது.

வைரல்: முதலமைச்சர் விஜய் காரை ஓட்டிச் செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களுக்கு செம்ம தீனியாக அமைந்துள்ளது. "தலைவர் எப்பவுமே மாஸ் தான்" என்றும், "முதலமைச்சர் ஆனாலும் அந்த எளிமை மாறவில்லை" என்றும் அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தின் அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணமும், கார் ஓட்டிய எளிமையான வீடியோவும் தான் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறி இணையத்திக் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X