மாரத்தானில் மாஸ் காட்டிய CM விஜய்.. ஒரே பாராட்டு மழையா இருக்கே.. அந்த நடிகர் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்கியதுடன், வெறும் கொடியசைத்து தொடங்கி வைக்காமல், நேரடியாக மாரத்தானில் ஓடி அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தார். இப்படி இருக்கையில், இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் சிபிராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பங்கேற்று ஓடியது பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் தலைவர் என்ற முறையில் மட்டும் இல்லாமல், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராகவும் அவர் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில், இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் சிபிராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதில், "கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக வலுவான செய்தியை இந்த மாரத்தான் அனுப்பியுள்ளது. நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா, நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல், தானும் முழு மாரத்தானை ஓடி முடித்து, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி என்று வரும்போது அவர் இன்னும் நம்முடைய 'இளைய தளபதி'தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஆரோக்கியமான தமிழ்நாட்டிற்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

CM Vijay Wins Praise After Anti-Drug Marathon Actor Sibiraj Calls Him Still Our Ilaya Thalapathy

இந்நிலையில், சிபிராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, "இளைய தளபதி" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகும், அவரது உடற்தகுதி மற்றும் உடற்பயிற்சி மீதான அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக சிபிராஜ் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இளைய தளபதி: மேலும், சிபிராஜின் பதிவுக்கு கீழ் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "முதலமைச்சர் ஓடியது இளைஞர்களுக்கு பெரிய ஊக்கம்", "போதைப்பொருள் ஒழிப்புக்கு இது நல்ல தொடக்கம்", "இளைய தளபதி என்ற பட்டத்திற்கு இன்னும் தகுதியானவர்தான் விஜய்" என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

CM Vijay Wins Praise After Anti-Drug Marathon Actor Sibiraj Calls Him Still Our Ilaya Thalapathy

கவனம்: போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஓடி பங்கேற்றது ஒரு பக்கம் பேசப்பட்டு வரும் நிலையில், அதை பாராட்டி நடிகர் சிபிராஜ் பகிர்ந்துள்ள "இன்னும் அவர் நம்முடைய இளைய தளபதிதான்" என்ற ஒரு வரி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X