சிஎம் விஜய் அணியும் கோட்டின் விலை இவ்வளவு காஸ்ட்லியா?.. பிரசாந்த் ரங்கசாமி போட்ட பரபர போஸ்ட்!

சென்னை: விஜய் சினிமாவில் இருந்த போது கூட அவர் அணியும் உடைகள் குறித்து பெரிய ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்கள் மற்றும் டிகோடிங் இல்லாமல் இருந்தன. ஆனால், அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய்யை பலரும் உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.

விஜய் அணிந்த ஒயிட் ஷர்ட் மற்றும் பெய்ஜி பேன்ட் பலரையும் கவர்ந்தது. ஓட்டுப் போடும் போது ஆண்களை போல இளம் பெண்களும் அதே டிரெஸ் கோடில் உடை அணிந்து வாக்களித்தனர்.

CM Vijay s Coat Suit price stirs debate in social media

விஜய் முதலமைச்சர் ஆன பிறகு அதே டிரெஸ் அணிவாரா? அல்லது வேட்டி சட்டை அணிந்து சட்ட சபைக்கு வருவாரா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், முதல்வன் பட ஸ்டைலில் கோட் சூட் அணிந்துக் கொண்டு முதலமைச்சராக விஜய் அந்த நாற்காலியில் சும்மா கெத்தா அமர்ந்துள்ளார். இந்நிலையில், அவரது கோட் விலை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக விமர்சித்து போட்ட பதிவுக்கு விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

பீஸ்ட் வீர ராகவன் லுக்: நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தில் வீர ராகவன் கெட்டப்பில் விஜய் கோட் சூட் அணிந்து நடித்திருப்பார். அதே போலத்தான் தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தொடர்ந்து கோட் சூட் அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். பீஸ்ட் படத்தில் வந்த கோட்டை போலவே வேண்டும் என விஜய் சொல்லி டிசைன் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

விஜய் கோட் விலை 2.5 லட்சமா?: "விஜய் அணியும்கோட்டின் விலை இரண்டரை லட்சம்.பத்து கோட்டு 25 லட்சம் ரூபாய்க்கு தைத்திருக்கிறார்.ஏழை தாயின்மகனின் ஆடம்பரம்!Instaவிலும் twitterலும் விசில் போட்ட மக்கா, உங்க தலைவன் போடுவது லட்சகணக்கான விலையுள்ள சொக்கா!" என பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி பதிலடி: விஜய் அரசியலில் பெரிதாக வெற்றிப் பெற வாய்ப்பில்லை என்றும் அவர் வெற்றிப் பெற்றால் மொட்டை போடுகிறேன் என சவால் விட்ட பிரசாந்த் ரங்கசாமி விஜய் வெற்றிக்குப் பிறகு மொட்டை போட்டது மட்டுமின்றி தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான பதிவுகளை போடத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது பத்திரிகையாளரின் விமர்சனத்துக்கு, "700 கோடி கணக்கு காட்டி வரி கட்டி இருக்கார் பாஸ் , வேணும்னா ஒரு கோடிக்கு கூட கோட் போடுவார் !

நாம பத்தாயிரம் ரூவா கணக்கு காட்டிட்டு , 2 கோடிக்கு வாட்ச் கட்டிட்டு சுத்துனோம் - அதெல்லாம் நடக்குறப்போ கைல குஷ்டமா டைப் பண்ண ?" என மு.க. ஸ்டாலினை கலாய்த்தும் பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்தும் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X