லீக் ஆன ஜன நாயகன் படத்தை 1.2 கோடி பேர் பார்த்துட்டாங்க.. நீதிமன்றத்தில் காவல்துறை ஷாக் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெறும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தின் திருட்டுப் பதிப்பு வெளியாகி, அதை 1.2 கோடி பேர் வரை இணையத்தில் பார்த்துள்ளதாக சென்னை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த ஜனநாயகன், அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது தயாரிப்பு நிறுவனத்திற்கும், படக்குழுவிற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது படம் சட்டவிரோதமாக சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மூலம் வேகமாக பரவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, படத்தை சட்டவிரோதமாக கசியவிட்டது மற்றும் பரப்பியது தொடர்பாக 21 பேரை பல கட்ட விசாரணைக்குப் பின்னர் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி சி. குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். அதில், தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழ் கிடைக்கும் முன்பே முழு படமும் ஹெச்.டி தரத்தில் இணையத்தில் வெளியாகி விட்டது. அப்படி சட்டவிரோதமாக வெளியான படத்தை இதுவரை சுமார் 1.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று சென்னை போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay s Jana Nayagan leak case 1 2 crore people watched online police tell Madras High Court

மேலும், இந்த சட்டவிரோத செயலால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை அவசியம் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வாதங்களை கேட்டு கொண்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட 21 பேரில் இருவரின் ஜாமீன் மனுக்களை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தேர்தல் பிரசார காலகட்டத்தில் ஜன நாயகன் படம் லீக் ஆனதால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்களும் இருக்கிறதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் தற்போது அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா, படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகாமல் போனதற்கு திமுக மற்றும் பாஜகவின் திரை மறைவிலான கூட்டணி தான் என்றும், படம் இணையத்தில் லீக் ஆனதற்கும் அதே திரைமறைவிலான கூட்டணி தான் என்றும் விமர்சித்திருந்தார். இவரது விமர்சனம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று பலரும் அப்போதே பதில் விமர்சனம் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X