அப்பா சிஎம்.. மகன் டைரக்டர்.. ஜேசன் சஞ்சயின் 26வது பிறந்த நாள்.. முதல்வர் வாழ்த்தினாரா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இன்று தனது 26-வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார். அவருக்கு காலை முதலே சமூக வலைதளங்களில் அவருக்குத் திரைப்பட நடிகர்களும் , நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஹீரோ இல்லை இயக்குநர்: ஜேசன் சஞ்சய் அப்பா விஜய்யை போலவே வெள்ளித்திரையில் மாஸாக ஹீரோவாக என்ட்ரி கொடுப்பார் என விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அவரை ஹீரோவான அறிமுகப்படுத்த பல இயக்குநர்கள் காத்திருந்த போதும், என் பாதை தனிப்பாதை என்பது போல, தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரின் வழியைப் பின்பற்றி இயக்குநராக அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

CM Vijay Jason Sanjay Birthday
Photo Credit:

ஜூலை 31 'சிக்மா': ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் மாநகரம், ராயன் போன்ற படத்தில் நடித்த மக்கள் மனதில் இடம் பிடித்த சந்திப் கிஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும், பிரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ், பண்டிட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்டத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் அதிரடி படமான இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பர்த்டே சர்ப்ரைஸ்: இந்நிலையில்,ஜேசன் சஞ்சயின் பிறந்தநாளை முன்னிட்டு 'சிக்மா' படத்தைத் தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கெத்தான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இயக்குநராகத் தனது முதல் அடியையே ஆக்‌ஷன் அவதாரத்தில் பலமாக எடுத்து வைத்துள்ள புதுயுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்கைகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், மகன் ஜேசன் சஞ்சய்க்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னாரா? என பலரும் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X