»   »  கருணாநிதியும் குட்டி இயக்குனரும்

கருணாநிதியும் குட்டி இயக்குனரும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

9 வயதிலேயே இயக்குநராகி உலக சாதனை படைத்த கிஷணை வரவழைத்துவாழ்த்தினார் முதல்வர் கருணாநிதி.

பெங்களூரைச் சேர்ந்த சிறுவன் கிஷண், உலகிலேயே மிகவும் இளைய வயதில்திரைப்பட இயக்குநராகிய பெருமை படைத்துள்ளார். இதற்காக கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்திலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

அவர் இயக்கிய முதல் படம் கேர் ஆப் ஃபுட்பாத். கன்னடத்தில் தயாரான இப்படம்தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழில்இப்படத்திற்கு சாதனை என பெயரிட்டுள்ளனர்.

மிக இளம் வயதிலேயே திரைப்படத்தை இயக்கிய பெருமை இத்தனை காலமாகநெதர்லாட்டுச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்குத்தான் இருந்தது அந்த சிறுவன் லெக்ஸ் திஒண்டர்டாக் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் தற்போது கிஷண்அச்சாதனையை முறியடித்துள்ளார்.

சாதனைச் சிறுவனான கிஷண் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி அவனைசென்னைக்கு வரவழைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு மிகவும் வித்தியாசமான ஒன்றாகஅமைந்தது. திரைத் துறைக்கும், கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது.

9 வயதில் சாதனை படைத்த கிஷண், 82 வயதாகும் கருணாநிதியுடன் மிகவும்ஆர்வத்தோடு கலந்துரையாடினார். கருணாநிதிக்கும் அதே ஆர்வம்தான். இவ்வளவுசின்ன வயதில் உன்னால் எப்படி படத்தை இயக்கும் ஆர்வம் வந்தது, அதன் பின்னணிஎன்ன, படம் இயக்கிய அனுபவம் ஆகியவற்றை குழந்தையின் உற்சாகத்தோடுகேட்டறிந்தார் கருணாநிதி.

இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கனிமொழி, பேரன் ஆதித்யா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் உடன்இருந்தனர்.

உங்களைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தேன், இப்போது பார்த்துவிட்டேன் என கிஷண் கூறியபோது குழந்தை போல சிரித்து கிஷணிடம் கைகுலுக்கினார் கருணாநிதி.சாதனை படத்தை ஸ்ரீராமுலு, ஜி.சண்முகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.கிஷணுக்கும் சினிமாவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தொலைக்காட்சிநாடகங்கள், நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் கிஷண். அதில் கிடைத்தஅனுபவம்தான் இயக்குநராக உதவியதாம்.

அது மட்டுமல்ல, கிஷணுக்கு 6 வயதாக இருக்கும்போதே ஹலோ என்ற படத்தில் ஒருபாட்டுக்கு இசையமைத்துள்ளாராம் கிஷண்.

தன்னை சந்தித்துவிட்டுக் கிளம்பிய கிஷணிடம், தமிழில் ஒரு படம் டைரக்ட் செய்.வேண்டிய உதவியை செய்றேன் என்று சொல்லிவிட்டு தலையை வருடிவிட்டு முத்தம்தந்தார் கருணாநிதி.

தாத்தாவிடம் முத்தம் வாங்கிய பின் அவரது கையில் ஒரு முத்தம் தந்துவிட்டுகிளம்பினான் கிஷண்.கிஷணை கையை குலுக்கி விடை கொடுத்தான் கருணாநிதியின் பேரன் ஆதித்யா.

Read more about: kishan meets karunanidhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil