»   »  குடும்பப் பாதைக்கு திரும்பிய கோட் நடிகர்

குடும்பப் பாதைக்கு திரும்பிய கோட் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து குடும்பப் படங்களில் நடிக்க கோட் சூட் நடிகர் ஆர்வம் காட்டுகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மலையாளத்தில் சூப்பர்ஸ்டாரான அந்த நடிகரும் தமிழின் நம்பர் 1 நடிகையும் இணைந்து நடித்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Coat Actor Turns Family Movies

இந்தப் படத்தை பார்த்த உச்ச நடிகர் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்கிறேன் என்று ஆசையுடன் கூறினார். ஆனால் இடையில் சில காரணங்களால் சென்னை இயக்குனரின் படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரம் சென்று விட்டார்.

இந்நிலையில் கால்களில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கோட் நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

வரிசையாக அண்ணன் - தம்பி பாசம் மற்றும் அண்ணன் - தங்கை பாசம் நடிகருக்கு நன்றாக கைகொடுத்து வருவதால் ஒரேயடியாக குடும்பப் பாதைக்கு திரும்பி விட்டாராம் நடிகர்.

கண்டிப்பாக 3 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் தொடங்கும் என்று கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக மலையாளப் படங்கள் அதுவும் குடும்பப் படங்கள் வசூலில் பட்டையைக் கிளப்பி வருவதால் தான் கோட் நடிகர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

English summary
Coat - Suit Actor Now More Interest to Family Sentiment Movies. Sources said After Few Months Coat Actor Play to the Malayalam Remake Movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil