ஆண் குழந்தைக்கு அப்பாவான விக்ரமின் கோப்ரா பட நடிகர்... யாருன்னு பாருங்க!

சென்னை: விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வரும் நடிகர் இர்ஃபான் பதான் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான். சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான், துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.

ஆண் குழந்தை பிறந்தது

ஆண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் இர்ஃபான் பதானுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் இர்ஃபான் பதான். தனது டிவிட்டர் பதிவில் தானும் தனது மனைவி சஃபாவும் தங்களின் ஆண் குழந்தை சுலைமான் கானை வரவேற்பதாக கூறியுள்ளார்.

 தாயும் சேயும் நலம்

தாயும் சேயும் நலம்

மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ள இர்ஃபான் பதான் தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இர்ஃபான் பதானுக்கும் அவரது மனைவி சஃபாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யூரோப்பில் படப்பிடிப்பு

யூரோப்பில் படப்பிடிப்பு

விக்ரம் நடிக்கும கோப்ரா படத்தில் கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்தப் படம் சென்னை, கேரளா, யூரோப் மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை மிர்ணாளினி, மலையாள நடிகர் லால், கனிகா, பத்மபிரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மூன்று மொழிகளில்..

மூன்று மொழிகளில்..

இந்தப் படத்தை லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி வருகிறது. இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X