கர்ப்பமானதையே சொல்லலையே.. அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவான கோப்ரா பட நடிகை.. குவியுது வாழ்த்து!

சென்னை: நடிகை மியா ஜார்ஜுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

ஆனால், சமூக வலைதளங்களில் தான் கர்ப்பமாக இருப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையோ, பேபி பம்ப் போட்டோவையோ மியா ஜார்ஜ் வெளியிடாத நிலையில், ரசிகர்களுக்கு இதுவொரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆகவே உள்ளது.

சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நேற்று நாளை ஹீரோயின்

இன்று நேற்று நாளை ஹீரோயின்

மலையாள நடிகையான மியா ஜார்ஜ் அமரகாவியம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். 2015ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெளியான இன்று நேற்று நாளை படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மியா ஜார்ஜ் திருமணம்

மியா ஜார்ஜ் திருமணம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை நடிகை மியா ஜார்ஜ் திருமணம் செய்துக்கொண்டார். மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் பிலிப்பின் திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நடிகை மியா ஜார்ஜ் தனது ஆண் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் எனப் பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் மியா ஜார்ஜுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடி வாழ்த்தி வருகின்ற்னர்.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram
கோப்ரா படத்தில்

கோப்ரா படத்தில்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இன்று நேற்று நாளை 2வது பாகத்திலும் அவர் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X