twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த நல்ல மனசு இருக்கே.. 40 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொண்ட கோப்ரா பட இயக்குநர்!

    |

    சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து, தனது சம்பளத்தில் 40 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

    லாக்டவுன் காரணமாக சினிமா துறையே முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. ஷூட்டிங் நடத்த முடியாமலும், உருவாக்கி வைத்துள்ள படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமலும், வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட முடியாமலும் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை குறைக்கும் நோக்கில் சில பிரபலங்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்

    கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி.. அப்பட்டமாக அழகை காட்டிய பிரபல நடிகை !கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி.. அப்பட்டமாக அழகை காட்டிய பிரபல நடிகை !

    தவிக்கும் தயாரிப்பாளர்கள்

    தவிக்கும் தயாரிப்பாளர்கள்

    பல முன்னணி நடிகர்கள் முதல் புரொடக்‌ஷன் பாய் வரை தினமும் லட்சம் முதல் கோடிக் கணக்கில் சம்பளத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களின் நிலை, தற்போது நிலவி வரும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அடியோடு மாறிப் போயுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவித்து வருகின்றனர் பல தயாரிப்பாளர்கள்.

    மூன்று மாதங்களுக்கும் மேல்

    மூன்று மாதங்களுக்கும் மேல்

    கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக, தியேட்டர்கள் திறக்கப்படாததால், பெரிய நடிகர்களின் படங்களை ஒடிடி தளத்திலும் ரிலீஸ் செய்ய முடியாமல், 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து, இன்னும் ஒரு வார காலம் ஷூட்டிங் பெர்மிஷன் கிடைத்தால், கோப்ரா போன்ற இறுதி கட்டத்தை எட்டியுள்ள படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விடலாம் என்ற நிலையிலும் பல தயாரிப்பாளர்களும், சினிமா கலைஞர்களும் தவித்து வருகின்றனர்.

    நம்மால் முடிந்தது

    நம்மால் முடிந்தது

    இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்ளப் போவதாக முதலில் அறிவித்தது, பல தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையையும், லேசான பாரத்தையும் இறக்கி வைப்பதாக இருந்தது. அவரை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், மகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

    40 சதவீதம்

    40 சதவீதம்

    டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, சியான் விக்ரமின் கோப்ரா எனும் மெகா பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 40 சதவீதம் சுமார் 1.25 கோடி வரை குறைத்துக் கொள்ள சம்மதித்துள்ளார்.

    பெரிய மனசு

    பெரிய மனசு

    சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தயாரிப்பாளர் லலித் குமார், அஜய் ஞானமுத்துவின் முடிவை வரவேற்றுள்ளார்.

    4 மில்லியன்

    4 மில்லியன்

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்' பாடல், 4 மில்லியன் வியூஸ் கடந்த யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. நகுல் அபயங்கார் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

    Read more about: cobra salary கோப்ரா
    English summary
    Now, director Ajay Gnanamuthu has volunteered to take pay-cut of 40% for Vikram-starrer 'Cobra'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X