தளபதி 65.. இந்த இயக்குநர் பெயரும் அடிபடுதே.. விஷயம் தெரிந்ததும் இயக்குநர் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: தளபதி 65 படத்தை இவர் தான் இயக்கப் போகிறார் என கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பெயரும் அடிபட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
தளபதி 65 படத்தின் இயக்குநர் யார்? என்பதை தெரிந்து கொள்ள தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அடிபட்ட பெயர்கள்
பிகில், மாஸ்டர் படங்களை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து இந்த இயக்குநர் படத்தில் தான் நடிக்கப் போகிறார் என்ற பல யூகங்கள் சமூக வலைதளத்தில் எழுந்து வந்தன. ஷங்கர், பாண்டிராஜ், ஏ.ஆர். முருகதாஸ், அருண்ராஜா காமராஜ், ஏ.ஆர். முருகதாஸ், ஏன் லோகேஷ் பெயரும் அடிபட்டு வருகிறது.

கோப்ரா இயக்குநர்
கடைசியாக சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா தான் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல்களும் வைரலாகின. ஆனால், அதுவும் உறுதியாகவில்லை என்றும், சிம்பு படத்தை சுதா இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பெயர் புதிதாக இடம்பெற்றுள்ளது.

என்ன சொன்னார்?
அஜய் ஞானமுத்துவின் ட்விட்டர் பக்கத்தில், சில விஜய் ரசிகர்கள், நேரடியாகவே, வைரலாகும் வதந்தி பதிவை போட்டு கேள்வி எழுப்பினர். அதை பார்த்த அஜய் ஞானமுத்து, "நோ.. இது யாரு பார்த்த வேலைன்னு தெரில" என வதந்தி மேலும் பரவாமல் தடுக்க உடனடியாக ட்வீட் போட்டு விளக்கம் அளித்து விட்டார்.

ரசிகர்கள் விருப்பம்
சூரரைப் போற்று படத்தின் டீசரை பார்த்த விஜய் ரசிகர்கள், சுதா கொங்கராவுடன் நடிகர் விஜய் படம் பண்ணினால் நல்லா இருக்கும் என சில வதந்திகளை பரப்பினர். தற்போது, சியான் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து மிரண்டு போன விஜய் ரசிகர்கள், இந்த காம்போ அடுத்து அமைந்தால் நல்லா இருக்கும் என்ற நோக்கத்தோடு இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் அஜய் ஞானமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், சூர்யாவின் 7ம் அறிவு படத்திலும் வேலை பார்த்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி, இமைக்க நொடிகள் ஹிட் அடித்துள்ள நிலையில், கோப்ரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 65 இயக்குநர் யார்?
கடந்த மார்ச் 15ம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், தளபதி 65 படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா பாதிப்புகள் எல்லாம் அடங்கிய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன. வெயிட் பண்ணுவோம்!


Click it and Unblock the Notifications











