எவ்ளோ க்யூட்டா இருக்காரு சியான் விக்ரம்.. கோப்ரா படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் ரிலீஸ்!

சென்னை: கோப்ரா படத்தின் 'தும்பி துள்ளல்' பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நாளை வெளியாகிறது.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram

இந்நிலையில், தற்போது, அந்த பாடலில் வரும் காட்சிகளை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சியான் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சியான் விக்ரமா இது என எண்ணத் தோன்றும் அளவுக்கு அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்.

கோப்ரா

கோப்ரா

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, மேலும் ஒரு படி மேலே போய், மிக பிரம்மாண்டமாக சியான் விக்ரமை வைத்து உருவாக்கி உள்ள படம் தான் கோப்ரா. கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி ஜோடியாகவும், இர்ஃபான் பதான் முக்கிய ரோலிலும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வெளிநாட்டு ஷூட்டிங்

வெளிநாட்டு ஷூட்டிங்

ரஷ்யாவில் கடைசி கட்ட ஷூட்டிங்கை நடத்த இருந்த நிலையில், மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக அவசர அவசரமாக நாடு திரும்பியது கோப்ரா படக் குழு. மீதமுள்ள ஷூட்டிங்கை எங்கே எப்படி படமாக்குவது என்ற யோசனையில் இருக்கும் இயக்குநர், தற்போது, ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட தலை அசைத்து அனுமதி கொடுத்துள்ளார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்' பாடல் நாளை வெளியாகிறது என்ற அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ..ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விக்ரம், ஸ்ரீனிதி திருமண வைபோக பாடலாக தும்பி துள்ளல் இருக்கும் என்பது போஸ்டர்களை வைத்து கணிக்க முடிந்திருந்தது.

சர்ப்ரைஸ் ட்ரீட்

சர்ப்ரைஸ் ட்ரீட்

நாளைய விடியலுக்கு காத்திருந்த சியான் விக்ரம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக தற்போது, கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்' பாடலின் போட்டோக்களை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களை விட அவர் அதிகமாக எக்ஸைட் ஆகியுள்ளார்.

செம க்யூட்

செம க்யூட்

கே.ஜி.எஃப் படத்தில் திமிரான பொண்ணாக பார்த்த ஸ்ரீனிதி ஷெட்டியா இது? என எண்ணத் தோன்றும் அளவுக்கு அவ்வளவு அழகாக காட்சி தருகிறார் ஸ்ரீனிதி ஷெட்டி. அவர் ஒரு புறம் அழகா இருக்க, மறுபுறம் சியான் விக்ரம், சந்தனம் தடவிய கன்னங்களுடன் செம க்யூட்டாக வெட்கம் எல்லாம் பட்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆட்டம் ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பம்

தொடர்ந்து விக்ரம் படங்கள் சொதப்பி வந்த நிலையில், இனி தான் தன்னுடைய ஆட்டம் ஆரம்பம் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா, துருவ நட்சத்திரம் மற்றும் மகன் த்ருவ் விக்ரம் உடன் இணைந்து சியான் 60 என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X