நேத்து அந்நியன்.. இன்னைக்கு ரெமோ.. சியான் விக்ரமை என்ன பண்ணி வச்சிருக்காய்ங்களோ?
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
Recommended Video
இந்நிலையில், மற்றொரு புதிய போஸ்டரையும் படக்குழு ரிலீஸ் செய்து, சியான் ரசிகர்களுக்கு ரிமைண்டர் செய்து வருகிறது.
இந்த படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான் வில்லனாக மிரட்டவுள்ளார்.
5 மணிக்கு
நேற்றே அந்நியன் ஷேப்பில், செம பாடி பில்டிங்கோடு சியான் விக்ரம் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது, 5 மணிக்கு என்பதை நினைவு படுத்தும் வகையில், சியான் விக்ரம், தனது 5 விரல்களை நீட்டியபடி, செம ஸ்டைலாக ரெமோ லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.
டைம் ஸ்லோவா போகுதே
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, விக்ரமை வைத்து, நிச்சயம் மிகப்பெரிய படத்தை கொடுப்பார் என ரசிகர்களின் எதிபார்ப்பு, அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்கேற்றார் போல, கோப்ரா குழுவின் அப்டேட்கள் அசத்துகின்றன.
நீ வா தலைவா
அந்நியன், ஐ என வித்தியாசமான பல படங்களை கொடுத்த விக்ரமுக்கு, சமீப காலமாக படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பத்து எண்றதுகுள்ள, ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் என தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், நிச்சயம் இந்த படம் விக்ரமுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கண்களில் தீ
நேற்று வெளியான கெட்டப் அந்நியன் லுக் போன்றும், தற்போது, வெளியாகி உள்ள கெட்டப் ரெமோ போன்றும் உள்ளதாகவும், சியான் விக்ரமின் கண்கள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை சொல்லத் துடிப்பதாகவும் ரசிகர்கள், ஒவ்வொரு பக்கமும், ஜூம் செய்து, தங்கள் கற்பனைகளை தட்டி விடுகின்றனர்.
இதுதான் பெஸ்ட்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக, சினிமா விமர்சகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சியான் விக்ரமின் சினிமா கரியரில் இது தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே விக்ரம் ரசிகர்கள், ரொம்ப வெறியேத்துறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நாளைக்கு இருக்கு சம்பவம்
சியான் விக்ரமின் ரசிகர்களின் காத்திருப்புக்கு, நிச்சயம் நாளைக்கு பெரிய சம்பவம் இருக்கும் என்றும், அஜய் ஞானமுத்து நிச்சயம் விக்ரமை வைத்து வெயிட்டான தரமான படத்தை தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











