ஒரு லுக்குன்னு சொன்னாங்க.. 7 லுக் வந்துருக்கு.. தெறிக்கவிடும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்! #CobraFirstLook
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி மிரட்டுகிறது.
Recommended Video
கோப்ரா படத்திற்கு இசையமைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் டிரெண்டிஙில் #CobraFirstLook என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சியான் விக்ரம் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் அலட்சியம்
சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு இரு தினங்களாக படக்குழு கொடுத்து வரும் நிலையில், இன்று காலை முதலே கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்யாமல் விக்ரம் ரசிகர்கள் அலட்சியப்படுத்தி வந்தனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியான உடனே தற்போது ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்கின்றனர்.
கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், சரியாக 5 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, சியான் விக்ரம் ரசிகர்கள், உடனடியாக ஒன்று திரண்டு ட்விட்டரில் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் சியான் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தருகிறார்.

ஹாலிவுட் லெவல்
கோப்ரா படத்தில் சியான் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வந்தது. அதெல்லாம், உண்மை தான் என்கிற ரீதியில், தற்போது, ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரே அடியாக 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிகர் விக்ரம் மிரட்டுகிறார். ஹாலிவுட் தரத்தில் மேக்கப் ஒர்க் இருக்கிறது.

விக்ரம் தானா?
தற்போது வெளியாகி உள்ள 7 கெட்டப்புகளை பார்க்கும், போது, இது நடிகர் விக்ரம் தானா? அல்லது வேறு ஒரு நபரா? என்ற எண்ணம் இயல்பாகவே ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து மிகப்பெரிய சம்பவத்தை செய்யப் போகிறார் என்பது இதிலேயே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











