அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா.

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், விக்ரமின் அந்நியன் லுக் போன்ற தோற்றம் வெளியாகி மிரட்டுகிறது.

இவ்ளோ கெட்டப்பா?

அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என மூன்று கெட்டப்புகளில் அசத்திய விக்ரம், ராஜபாட்டை படத்தில், ஒரு பாட்டுக்கு 7 கெட்டப்பில் நடித்திருப்பார். ஆனால், தற்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் தசாவதாரம் கமலையும் மிஞ்சி 20 கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.ஜி.எஃப் ஹீரோயின்

கே.ஜி.எஃப் ஹீரோயின்

கோப்ரா படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி போட்டுள்ளார். கன்னட நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வரும் சம்மருக்கு கோப்ரா படமும், ஜூன் மாத இறுதியில் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள் ரிலீசாக உள்ளன.

இர்ஃபான் பதான்

இர்ஃபான் பதான்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில், நயன்தாராவுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பை களம் இறக்கிய அஜய் ஞானமுத்து, கோப்ரா படத்தில் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானை களமிறக்குகிறார்.

டைட்டில் போஸ்டர்

டைட்டில் போஸ்டர்

சியான் விக்ரமின் கோப்ரா டைட்டில் மோஷன் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷலாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் டைட்டில் மோஷன் போஸ்டர் மிரட்டிய நிலையில், தற்போது, கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகி டிரெண்டாகிறது.

அந்நியனுக்கெல்லாம் அந்நியன்

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிழல் வடிவில், விக்ரமின், அந்நியன் மாதிரியான லுக் அந்த ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டில் இடம்பெற்று, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X