கோப்ரா தான் கன்ஃபார்ம்.. செம்ம மாஸாக வெளியான ’சியான் விக்ரம் 58’ டைட்டில் லுக்!
சென்னை: செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சியான் விக்ரம் 58' படத்திற்கு 'கோப்ரா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் முன்கூட்டியே கசிந்து விட்டது. இந்த படத்தில் அமர் எனும் ரோலில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளார். அதனால், படத்திற்கு அமர் என்ற டைட்டிலும் வைக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த கோப்ரா டைட்டிலே வைக்கப்பட்டுள்ளது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகளை மிஞ்சும் அளவுக்கு வேற லெவல் டைட்டில் டிசைன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையுடன் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு கோப்ரா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் அதன் டைட்டில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்ரம் மாஸ் லுக்
கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இருக்கும் மாஸ் லுக் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெரிய ராஜ நாகம் ஒன்று விக்ரமின் உடலை சுற்றியிருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ள ஃபேன் மேட் போஸ்டர் விக்ரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அஜய் ஞானமுத்து வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
கொல மாஸ்
தலைவா.. கொல மாஸ் தலைவா... ஃபர்ஸ்ட் லுக் நியூ இயர் அல்லது பொங்கலுக்கு வெளியிடுங்க.. ஸ்க்ரிப்ட் செம்மயா இருக்கும்னு நினைக்கிறோம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
சியானை எப்போ காட்டுவிங்க
அஜய் அண்ணா.. கோப்ராவை காட்டிட்டீங்க, சியானை எப்போ காட்டுவிங்க என இந்த ரசிகர் ஃபர்ஸ்ட் லுக் எப்போ வரும் எனக் கேட்கிறார்.
செம்ம டைட்டில் ஒர்க்
கோப்ரா டைட்டில் ஒர்க் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக நல்ல குவாலிட்டியாக இருக்கிறது. டைட்டில் ஒர்க்கை இந்த ரசிகர் போல பலரும் பாராட்டி வருகின்றனர். டைட்டில் டிசைனருக்கு பெரிய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











