twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளை கோப்ரா ஆடியோ ரிலீஸ்...இன்றே வெளியானது பாடல் லிஸ்ட்

    |

    சென்னை : நடிகர் விக்ரம் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரம், அடுத்ததாக கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் பா.ரஞ்சித் படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. பிறகு அவருக்கு மாரடைப்பு கிடையாது என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்தார்.

    விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் கிடையாது

    விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் கிடையாது

    விக்ரமிற்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இதயத்தில் லேசான அசவுகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

     விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்

    விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்

    உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் விக்ரம், நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, விக்ரம் தற்போது நலமுடன் உள்ளாராம். அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.

    கோப்ரா ஆடியோ விழாவில் பங்கேற்பாரா

    கோப்ரா ஆடியோ விழாவில் பங்கேற்பாரா

    அதோடு நாளை, அதாவது ஜுலை 11 ம் தேதி சென்னையில் நடக்கும் கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலினே உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை Phoenix Market City யில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    கோப்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

    கோப்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

    டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார்.இவர்களுடன் மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்திவ், பத்மபிரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஆகஸ்ட் 11 ம் தேதி கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரவேற்பை பெற்ற 3 பாடல்கள்

    வரவேற்பை பெற்ற 3 பாடல்கள்

    ஏற்கனவே கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக அதீரா பாடல், செகண்ட் சிங்கிளாக தும்பி துள்ளல் பாடல், முன்றாவது சிங்கிளாக உயிர் உருகுதே ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை நடக்க உள்ளது.

    Recommended Video

    Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
    மொத்த பாடல் லிஸ்ட் இதோ

    மொத்த பாடல் லிஸ்ட் இதோ

    இந்நிலையில் படத்தின் மொத்த பாடல்கள் லிஸ்டையும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இன்றே வெளியிட்டு விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக்/ஜிதின் ராஜ் எழுதி ஸ்ரேயா கோஷல்/ நகுல் அப்யங்கர் பாடிய தும்பி துள்ளல், பா.விஜய் எழுதி வகு மழன் பாடிய அதீரா, தாமரை வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய உயிர் உருகுதே, தாமரை வரிகளில் சர்தக் கல்யாணி பாடிய தரங்கிணி, பா.விஜய் வரிகளில் ரக்ஷிதா சுரேஷ் பாடிய ஏலே இளஞ்சிங்கமே ஆகிய 5 பாடல்கள் தான் நாளை வெளியிடப்பட உள்ளன.

    English summary
    Cobra movie audio launch event was planned tomorrow. But before audio launch today Seven screen studio released Cobra full tracklist. This song list goes viral in social media.Already movie team released 3 songs lyrical videos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X