மரண மாஸாக வெளியான கோப்ரா ஸ்பெஷல் போஸ்டர்... எதுக்கு இந்த போஸ்டர்ன்னு தெரியுமா ?

சென்னை : ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்சன் , ஆக்ஷன், த்ரில்லர் படம், கோப்ரா. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் லலித் குமார் தயாரித்துள்ளார். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, ரோஷன் மேத்திவ், மிருனாளினி ரவி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகும் படம் இது.

விக்ரமிற்கு இத்தனை கெட்அப்பா

விக்ரமிற்கு இத்தனை கெட்அப்பா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படம் மே 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மதியழகன் என்ற ரோலில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு , மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் அதிகபட்சமாக விக்ரம் 25 கெட்அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இர்ஃபான் பதான், இன்டர்போல் ஆபீசர் ரோலில் நடித்துள்ளாராம்.

கோப்ரா போஸ்டர் இதுக்கு தானா

கோப்ரா போஸ்டர் இதுக்கு தானா

கோப்ரா படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இன்று வெளியிட்டுள்ளது. நாளை நடிகர் சியான் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கலர்ஃபுல்லான மரண மாஸ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு நிற பேக்கிரவுண்டில் சுற்றி ஏராளமான பெண்கள் நடனமாட , கருப்பில் சிவப்பு நிற பூ போட்ட கோட், முகத்தில் ஒரு பக்கத்தில் மறைத்தபடி மாஸ்க் அணிந்து விக்ரம் நடந்து வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

 விக்ரமிற்கு குவியும் வாழ்த்துக்கள்

விக்ரமிற்கு குவியும் வாழ்த்துக்கள்

Happy Birthday Chiyaan Vikram என்ற வாழ்த்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருடன், நாளை விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா செகண்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்துள்ள டைரக்டர் அஜய் ஞானமுத்து, Many many more happy returns of the day dear Acting Monster Chiyaan Vikram sir. நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு Inspiring மற்றும் பொழுதுபோக்கவும் பல பல ஆண்டுகள் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும் விக்ரமிற்கு இப்போதே பிறந்தநாள் வாழ்த்து சொல்ல துவங்கி விட்டனர்.

ட்விட்டர் டிரெண்டிங்கில் கோப்ரா

ட்விட்டர் டிரெண்டிங்கில் கோப்ரா

கோப்ரா ஸ்பெஷல் போஸ்டர் ரிலீசை முன்னிட்டு #Cobra, #VikramBDayCDP,#HBDChiyaanVikram போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளன, இவற்றை டேக் செய்து ஏராளமான ரசிகர்கள் விக்ரமிற்கு இன்றே பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான விக்ரமின் மகான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாலும், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் படம் என்பதாலும் கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X