Don't Miss!
- News
ஆப்டிகல் இல்யூஷன் படம்.. இங்கே ஒரு யானை மறைந்திருக்கு.. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலிதான் பாஸ்!
- Technology
இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!
- Finance
இந்திய நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.... சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?
- Sports
ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாசிங்டன் சுந்தர் விலகல்... இந்திய அணியில் ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு
- Travel
இந்தியாவிலேயே மிகவும் க்ரிஸ்டல் க்ளியர் ஆன நதி இதுதான் – அதனைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
- Lifestyle
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விக்ரமின் ‘கோப்ரா‘ வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய உதயநிதி!
சென்னை : நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ளத் திரைப்படம் கோப்ரா.
சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயல்பான சிறந்த நடிகர் 'பூ' ராமு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

விறுவிறுப்பான படப்பிடிப்பு
செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோப்ரா எக்ஸ்குளுசிவ் போஸ்டர்
கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு இருதினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டு இருந்தது. வித்தியாசமான வெளியான உள்ள அந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். பான் இந்திய படமாக வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் விக்ரம் ஏழு விதமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்
இந்நிலையில், கோப்ரா திரைப்படத்தின் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனமாகும்.

அசாத்திய நடிப்பு
விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், பாபி சின்ஹா, வாணி போஜன் ,சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். மது ஒழிப்பை பற்றி பேசிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் ஹாலிவுட் நடிகரை நினைவுப்படுத்தி மொத்த கதையையும் விக்ரம் தாங்கிபிடித்திருந்தார்.