Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விக்ரமின் கோப்ரா ரிலீஸ் எப்போது...செம அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்
சென்னை : இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார் என சொல்லப்பட்டது.'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில் 'கோப்ரா' படத்தின் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
அம்மாவா நடிக்க பதட்டப்பட்ட நடிகை.. யார் அந்த கிளாமர் டால்ன்னு தெரிஞ்சுக்கலாமா!
எதிர்பார்ப்பை கிளப்பிய பாடல்கள்
இதைத் தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கோப்ரா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எப்போது படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அவர் வில்லன் கிடையாது
கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், இந்த படத்தில் இர்ஃபான் பதான் வில்லன் கிடையாது. அவர் படத்திலும் ஆல் ரவுண்டர் தான் என தெரிவித்தார். இதனால் இர்ஃபான் இல்லை என்றால், வேறு யார் வில்லன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த சமயத்தில் கோப்ரா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக தகவல் பரவியது.
தள்ளி வைக்கப்பட்ட கோப்ரா ரிலீஸ்
ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீசை அறிவித்த கார்த்தியின் விருமன் படத்தை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 12 ம் தேதி விருமன் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ரிலீஸ் தேதி சொல்லவேயில்லையே
ஆனால் கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது என இதுவரை இறுதியாக அறிவிக்கவில்லை. இதனால் கோப்ரா படத்தை எப்போ தான் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆடியோ வெளியீட்டிற்கு பிறகு படம் எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
கோப்ரா டிரெண்டிங்கிற்கு காரணம்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கோப்ரா ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதியானதால் இதனை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். #Cobra ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.