மாஸா.. கெத்தா.. வேற லெவலில் வெளியானது விக்ரமின் 'கோப்ரா' செகண்ட் லுக்.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து.
இவர் அடுத்து இயக்கும் படம் கோப்ரா. விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு 58-வது படம்.

ஸ்ரீநிதி ஷெட்டி
கதாநாயகியாக, ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எப் படத்தில் நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மிருளானி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

தெலுங்கு, இந்தி
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அனைத்து மொழிக்கும் ஏற்றது போல டைட்டில் வேண்டும் என்பதால் கோப்ரா என்று வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் லேட்
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதன் டைட்டிலுக்கும் விக்ரம் கேரக்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று இதன் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியிருந்தார். இந்தப் படம் மே மாதம் வெளிவருவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஷூட்டிங் தள்ளிப் போனது.

எண்களும் எழுத்துகளும்
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இதன் இரண்டாவது லுக் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி இன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் விக்ரம் முகத்தின் ஒரு பகுதி, எழுத்துகளும் எண்களும் சிதறிக் கிடப்பது போல இந்த தோற்றம் காட்சி அளிக்கிறது.

போஸ்ட் புரொடக்ஷன்
வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமின் இந்த போஸ்டர் வேகமாக பரவி வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











