‘கோப்ரா’ படபிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது..இயக்குனர் ட்வீட்!

சென்னை: பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் தான் அஜய் ஞானமுத்து.

அவரின் முதல் திரைப்படமான டிமான்டி காலணி படத்தின் மூலம் தமிழ் சினமாவின் ரசிகர்களிடத்தில் நல்ல இடத்தை பிடித்தார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கோப்ரா.

மீண்டும் துவக்கம்

மீண்டும் துவக்கம்

கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கிய நிலையில் இந்தியா மட்டுமின்றி ரஷ்யாவிலும் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது. இது குறித்து படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார்.

சரியான கூட்டணி

சரியான கூட்டணி

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரையுலக ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரமும் அது போல படத்திற்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்ட கூடிய மகா நடிகர். எனவே இவர்களின் கூட்டணி மீது ரசிகர்களிடத்தில் ஆர்வம் மிகுந்தே காணப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான் போன்ற படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவருடைய பழைய ஃபார்மிக்கு திரும்ப இந்த படம் சரியான தீனியாக இருக்கும் என சியான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

திரையுலகமே எதிர்பார்ப்பு

திரையுலகமே எதிர்பார்ப்பு

கோப்ரா சியான் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே எதிர்பார்த்து காத்துள்ள படமாக உள்ளது. படத்தினுடைய முதல் பார்வை, மோஷன் போஸ்டர், தும்பி துள்ளல் பாடலின் லிரிக் வீடியோ மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது. இதையடுத்து மீண்டும் இன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்தும், கோப்ரா எப்போது படமெடுக்கும் (வெளியாகும்) என திரையுலகம் காத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X