ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய கோப்ரா டீம்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகில் உள்ள அத்தனை ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பல பிரபலங்களும் ரஹ்மானை வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், விக்ரமின் கோப்ரா பட டீமுடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மெர்சல் அரசன்

மெர்சல் அரசன்

இசையுலகின் மெர்சல் அரசன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான். நேற்று ஏ.ஆர். ரஹ்மானின் 53வது பிறந்தநாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழையில் சமூக வலைதளங்கள் மெர்சலாகின.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகள் என்றாலே இசைக்கு முதலில் தேர்வு செய்வது ஏ.ஆர். ரஹ்மானை தான். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார்.

கோப்ரா

அதே போல, விக்ரமின் 58வது படமான கோப்ரா படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

இசை கேக்

ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு கீபோர்ட் வடிவிலான இசை கேக்கை கோப்ரா படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய ரஹ்மான், இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு கேக்கை கொடுத்தார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X