மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி.. உறுதி செய்த விக்ரம்.. வித்தியாசமான கதைக்களமாம்!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது கோப்ரா படம்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில், இந்த கெட்டப்புகளை மட்டுமே நம்பி படம் பார்க்க வராதீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் எமோஷனலான பல விஷயங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் சிறப்பான தனது படங்களால் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறார். இவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு முயற்சியாக சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு தந்து வருகின்றன. அந்த வகையில் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த சேது படம் முதல் தற்போது வெளியாகவுள்ள கோப்ரா படம் வரை அனைத்துமே இவரது கேரியர் பெஸ்ட்டாகவே அமைந்துள்ளன.

ஏமாற்றம் கொடுத்த வலி

ஏமாற்றம் கொடுத்த வலி

தனக்கு ஆரம்ப காலத்தில் கிடைக்காத படவாய்ப்புகளே இவரை சிறப்பாக செதுக்கியது. அந்த ஏமாற்றங்கள் கொடுத்த வலியையே தனது படங்களுக்கான முதலீடாக கொண்டு செயல்பட்டு வருகிறார் விக்ரம். தனக்கு சிறப்பாக கைகொடுத்த சேது படத்தில் இவரது கேரக்டரான சியான் என்ற பெயராலேயே தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

சிறப்பான மகான் படம்

சிறப்பான மகான் படம்

ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக தேர்வு செய்யும் விக்ரம், சாதாரண திரைக்கதையாக இருந்தாலும், அதை தன்னுடைய நடிப்பால் சிறப்பாக்கும் திறமையும் இவருக்கு சாத்தியப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மகான் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் தன்னுடைய மகனுடன் போட்டிப் போட்டு நடித்திருந்தார். வழக்கம் போல வெற்றி இவருக்கே கிடைத்தது.

கோப்ரா படம்

கோப்ரா படம்

இதனிடையே டிமாண்டி காலனி என்ற சிறப்பான படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளிலேயே வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் 20 கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார்.

கோப்ரா எமோஷனல் படம்

கோப்ரா எமோஷனல் படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் பேசிய விக்ரம், படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். இந்தப் படம் எமோஷனலாக ரசிகர்களை கவரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அஜய் ஞானமுத்துவும் அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தில் இணைந்து செயல்பட உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி

விக்ரம் -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது என்றும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த தன்னுடைய படங்கள் குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உடல் இளைக்கும் விக்ரம்

உடல் இளைக்கும் விக்ரம்

இதனிடையே, டிசம்பரில் சூட்டிங் துவங்கவுள்ள பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக தான் உடல் இளைத்து, நீண்ட தாடியுடன் களமிறங்கவுள்ளதாகவும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் பீரியட் படமாக இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உறுதி செய்த விக்ரம்

உறுதி செய்த விக்ரம்

நடிகர் விக்ரம் -அஜய் ஞானமுத்து கூட்டணியில் கோப்ரா படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படம் உருவாகவுள்ளதாக கடந்த மே மாதத்திலேயே தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போது கோப்ரா படம் ரிலீசாகாத நிலையில், இதுகுறித்து விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தை விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து உறுதி செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X