இசைபுயலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்… கோப்ரா டீசர் அப்டேட் வெளியானது !
சென்னை: சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கோப்ரா.
இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாளையொட்டி கோப்ரா படக்குழு டீசர் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது.

துள்ளலான இசை
கோப்ரா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாடலின் லிரிக் வீடியோவை வித்தியாசமான முறையில் படக்குழு வெளியிட்டது. தும்பி துள்ளலில் இசைபுயலின் துள்ளலான இசை பலரின் பாராட்டுகளை அள்ளியது.

இசைபுயலின் இசையில்
ரஹ்மானின் இசையில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் (எதிர்பார்க்கப்படுகிறது), கோப்ரா, நவரசா என பெரிய படங்கள் வெளிவரவுள்ளன. இந்நிலையில் மே மாதம் வெளிவரவுள்ள கோப்ரா படத்தின் மீதமுள்ள பாடல்கள் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

முழுவீச்சில் படக்குழு
கோப்ரா படத்தினுடைய முதல் பார்வை, மோஷன் போஸ்டர், தும்பி துள்ளல் பாடலின் லிரிக் வீடியோ மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது. இதையடுத்து சமீபத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படக்குழு முழுவீச்சில் பணிகளை முடித்து வருகிறது.

படக்குழு வாழ்த்து
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கோப்ரா படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்தும் ரசிகர்களுக்கு விருந்தாக டீசர் அப்டேட்டும் கொடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் டீசர் வருகின்ற 9ம் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











