வரு, ரித்தீஷ் உட்பட.. விஷால் எல்லோரையும் பயன்படுத்தி விட்டு கழற்றி விட்டு விடுவார்: ஆர்.கே.சுரேஷ்
எல்லோரையும் பயன்படுத்தி விட்டு கழற்றி விட்டு விடுவார் என விஷால் மீது ஆர்.கே.சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: விஷால் எல்லோரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார் என நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
வில்லனாக அறிமுகமாகி கதை நாயகனாக வளர்ந்திருப்பவர் ஆர்.கே.சுரேஷ். இவர் நாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .
அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

ஈகோ இல்லை:
அவ்விழாவில் கலந்து கொண்டு நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது, " மலையாளத்தில் ஈகோ இல்லை. அங்கு குடும்பமாக வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் இங்கு தமிழ் சினிமாவில் அந்த சூழல் இல்லை.

மம்மூட்டியின் நட்பு:
எல்லா சினிமாவும் ஒன்று தான். இந்த படம் உலகளவில் எல்லா பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும். மதுர ராஜா படத்தில் நடித்த போது மம்மூட்டியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. நிறைய மலையாள படங்களில் நடிப்பேன்.

பொள்ளாச்சி சம்பவம்:
இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்தும். நேகா, அக்ஷரா என எல்லோரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்.

விஷால்:
நடிகர் சங்க தேர்தலில் விஷால் தவிர்த்து வேறு யார் நின்றாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்துவோம். ஜே.கே.ரித்திஷின் கனவை நிறைவேற்றுவோம். விஷால் எல்லாரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார். உதயா, ரித்திஷ், வரலட்சுமி உள்பட நிறைய பேர் இருக்கிறார்கள். வரலட்சுமியை நட்பு ரீதியில் குறிப்பிட்டேன்.

தனித்துப் போட்டி:
கார்த்தி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதனை ஏற்போம். இல்லை என்றால் நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் போட்டியிடும். ஆனால் நான் போட்டியிட மாட்டேன்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











