யோகிபாபுவின் அசத்தல் காமெடியில் காக்டெய்ல்.. புதிய ப்ரோமோ வீடியோ !

சென்னை : காக்டெய்ல் படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.

யோகிபாபு தர்மபிரபு மற்றும் கூர்கா படங்களில் இதுவரையில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதன்பின் இவர் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் படம் தான் காக்டெய்ல் இந்த படத்தை அறிமுக இயக்குனரான ரா.விஜய முருகன் இயக்கி இருக்கிறார். படத்தை தயாரித்திருக்கிறார் பிஜி.முத்தையா.

cocktail tamil movie promo video

இந்த படத்தில் நடித்த நடிகர்கள் இணைந்து பேசியுள்ள காணொலியை படக்குழு ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது. இதில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் மைம் கோபி, விஜய் தொலைகாட்சி புகழ் மற்றும் பாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த படத்தை பற்றி பேசும்போது மைம் கோபி தான் கே.பி என்ற கதாபாத்திரத்தில் படத்தில் நடித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் படத்தில் முழுக்க முழுக்க டார்க் காமெடி செய்து நடித்திருப்பதாகவும் தெரிவித்து கொண்டார். தற்போது உள்ள காலகட்டதுக்கு சந்தோஷம் தேவைப்படுகிறது அதை இந்த படம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார் .

cocktail tamil movie promo video

மேலும், யோகிபாபு ஹேர்ஸ்டைலில் அறிமுகமாகிய விஜய் தொலைகாட்சி புகழ். தானும் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறினார். விஜயுடன் அஜித்துடன் நடித்த யோகிபாபு நம்மிடம் எப்படி பழகுவார் என்ற சந்தேகத்திலே நடிக்க துவங்கினேன் ஆனால் எதிர்பாராத விதத்தில் அவர் நன்கு பழகினார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .

cocktail tamil movie promo video

மேலும் பேசிய மேடை நகைச்சுவை கலைஞர் பாலா, காக்டெய்ல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிரம்பிய படம் என்றும். இந்த படத்தில் யோகிபாபு தான் சிரிக்க வைத்து அசத்தியிருப்பதாக கூறினார் .

படத்தில் நடித்த மற்ற முக்கிய நடிகர்களும் படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக கூறினார்கள். படத்தின் தயாரிப்பாளர் பிஜி முத்தையாவிற்கு இது தயாரிப்பு ரீதியாக நான்காவது படம். மிகவும் நல்ல தயாரிப்பாளர் நல்ல முறையில் படத்தை தயாரித்து இருப்பதாக நடிகர்கள் கூறினார்கள் .

cocktail tamil movie promo video

யோகிபாபு நாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் தான் காக்டெய்ல். இந்த படத்தில் பல நகைச்சுவை பிரபலங்களும் நடித்து அசத்தியுள்ளனர். இந்த படம் கூடிய விரைவில் திரையில் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்க இருக்கிறது. யோகிபாபு அடுத்து நாயகனாக ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கும் மண்டேலா படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X