ஸ்டேபிளர் பின்னில் தனுஷின் கர்ணன் ஓவியம்...சாதனை படைத்த கோவை இளைஞர்
கோவை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கர்ணன். இதனை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்து. ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
கோவையை சேர்ந்த சீவாக வலுதி என்பவர், கர்ணன் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார். இதனால் ஈர்க்கப்பட்ட அவர் கர்ணன் டீமுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்தார். இதனால் ஸ்டேபிளர் பின்களை வைத்து தனுஷின் ஓவியத்தை உருவாக்கி உள்ளார்.

இதற்கு முன் 3072 கப்களை பயன்படுத்தி 3டி.,யில் கமலின் ஓவியத்தை இவர் உருவாக்கி இருந்தார். இதே போல் 13,000 நகங்களை பயன்படுத்தி கமலின் ஸ்டிரிங் ஆர்ட்டை உருவாக்கினார்.
தற்போது ஸ்டேபிளர் பின்களை பயன்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ஸ்டேபிளர் பின்களை வைத்து அதிகமானவர்கள் முயற்சித்தது இல்லை. இது பற்றி ஆய்வு செய்த போது ஸ்டேபிளர் பின்னை வைத்து கர்ணன் தனுஷ் மற்றும் காட்டு பேச்சியின் உருவத்தை உருவாக்க நினைத்தேன்.
அசுரன் படத்திற்காக அவர் தேசிய விருது வென்ற போதே இந்த ஆர்ட்டை உருவாக்க நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. அதனால் கர்ணன் படக்குழுவை கவுரவிப்பதற்காக தற்போது செய்துள்ளேன் என்றார்.

கர்ணன் டீம்மை கவுரவப்படுத்தியதுடன் சர்வதேச சாதனை புத்தகத்திலும் சீவாகாவின் இந்த சாதனை முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையை கலைப்புலி தாணுவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை உருவாக்க சீவாகா ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டார். பல ட்ரிக்கள், மெஷின்களை பயன்படுத்தி இதனை உருவாக்கினாராம். ஒரு மில்லியன் பின்களை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











