twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவைன்னா கெத்து - கோயம்புத்தூர் தின ஸ்பெஷல் கீதம் #CoimbatoreDay

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கோவைன்னா கெத்து - கோயம்புத்தூர் தின ஸ்பெஷல் கீதம்- வீடியோ

    கோவை : கோயம்புத்தூருக்கு இன்று 231-வது பிறந்தநாளாம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவைக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு. கோயம்புத்தூர்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய நகரமாகும்.

    கோயம்புத்தூரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹிப்ஹாப் ஆதி 'கோவை கெத்து ஆன்த்தம்' என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்.

    இந்தப் பாடலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

    கோவை வரலாறு

    கோவை வரலாறு

    சோழர்களிடமிருந்து பாண்டியர் வசம் வந்த கோவை பின்னர் 13-ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சிக்குப் போனது. 14-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் ராஜ்ஜியம் செய்த கோவை பிறகு விஜய நகரப் பேரரசர்களின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.

    விருப்பமான நகரம்

    விருப்பமான நகரம்

    அதன்பிறகுதான் நாயக்கர்கள் கோவையை ஆட்சி செய்தனர். கோவை நகருக்கு பல சிறப்புகள் இருகின்றன. இயற்கைச் சூழல், வளங்கள், மக்களின் குணம் என பெரும்பாலானோரால் விரும்பப்படக்கூடிய நகரம் கோயம்புத்தூர்.

    கோயம்புத்தூர் தினம்

    கோவையின் பிறந்தநாளை முன்னிட்டு 'கோவை கெத்து ஆன்த்தம்' வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. கோவையின் பல பெருமைகள் இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளன.

    கோவைக்காரர்கள்ஹேப்பி

    கோவைக்காரர்கள்ஹேப்பி

    கோயம்புத்தூர் தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் #CoimbatoreDay எனும் ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறார்கள். கோவை ஆன்த்தம் பாடலையும் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

    ஹிப் ஹாப் ஆதி

    ஹிப் ஹாப் ஆதி

    கோவை கீதத்தை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி, 'என் இதயத்தின் பக்கத்தில் கோவை இருக்கிறது. என் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை செலவிட்டிருக்கிறேன். இந்தப் பாடலை என்னை உருவாக்கிய இந்த நகரத்திற்குக் காணிக்கையாக்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    பால்யகாலத்துக்கு

    பால்யகாலத்துக்கு

    நான் கோவை ஆன்த்தம் பாடியிருப்பதால் இன்னொரு நகரத்தைக் குறைத்து எடை போடுவதாக நினைக்கக்கூடாது. இந்தப் பாடலின் மூலம் நான் பால்யகாலத்துக்குத் திரும்பி இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ஆதி.

    English summary
    Today is Coimbatore city's 231th birthday. Coimbatore also called as Manchester of South India. On the birthday of Coimbatore, Hiphop adhi has released a song in the name 'Kovai Gethu Anthem'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X