twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காத்தாடிக் கிடக்கும் வகுப்பறைகள்.. கோயமுத்தூர் பேராசிரியர் வேதனை.. காரணம் 2.0!

    கல்லூரி மாணவர்கள் பலர் வகுப்பிற்கு செல்லாமல் 2.0 படத்திற்கு சென்றிருப்பதாக பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    2.0 முதல் நாள் அதிர வைக்கும் வசூல் சாதனை- வீடியோ

    சென்னை: இன்று வகுப்பறைக்கு பசங்க யாரும் வராததால், 2.0 படம் ஓடும் திரையரங்குகள் நிரம்பி வழியும் என கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    வழக்கமாக ரஜினி படங்கள் எல்லாமே பண்டிகை நாட்களில் வெளியாகும். ஆனால் 2.0 திரைப்படம் வேலை தினமான 29ம் தேதி வெளியானது. இருப்பினும் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    Coimbatore professor status on 2.0

    முதல் நாள் டிக்கெட் முன்பதிவு பல லட்சங்களை தாண்டி சாதனை படைத்தது. விமர்சனங்களும் படத்துக்கு ஆதரவாக வந்துள்ளதால், படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

    ஆனால் வேலை தினமான நேற்று அலுவலகங்களுக்கு விடுமுறை எடுக்க முடியாத பலரும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படம் பார்க்கலாம் என்ற யோசனையில் தங்களை சாந்தப்படுத்திக்கொண்டனர்.

    இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "மாணவர்கள் அனைவரும் 2.0 படத்துக்கு சென்றுவிட்டதால், வகுப்பறை காலியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார். அவரது பதிவு ரஜினி ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    ஆசிரியரே உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    English summary
    A coimbatore based professor said in twitter that the class rooms are empty as 2.0 is runnig packed house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X