முடிவில்லாத கேள்விகளுக்கு உண்மை மட்டுமே முடிவு தரமுடியும்... கோல்ட் கேஸ் படம் குறித்து பிரித்வி
கொச்சி : நடிகர் பிரித்வியின் கோல்ட் கேஸ் படம் வரும் 30ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது.
பிரித்விராஜ் காவல்துறை அதிகாரியாக வரும் இந்த படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோல்ட் கேஸ் படம்
நடிகர் பிரித்விராஜ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் கோல்ட் கேஸ். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இந்த படத்தை தனு பாலக் இயக்கியுள்ளார். படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.

ஓடிடியில் மலையாள படங்கள்
கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஓடிடி தளங்களில் தொடர்ச்சியாக மலையாள படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வருடத்தில் த்ரிஷ்யம் 2, நிழல், இருள், ஜோஜி ஆகிய படங்கள் வெளியான நிலையில் மாலிக், கோல்ட் கேஸ் படங்களும் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

ஜூன் 30ல் ரிலீஸ்
கோல்ட் கேஸ் படம் ஜூன் 30ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக கடந்த வாரத்தில் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் படம் குறித்த தனது பிரத்யேக பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

உண்மையே முடிவு
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முடிவில்லாத கேள்விகளுக்கு உண்மை மட்டுமே ஒரு முடிவை தர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். படத்தின் டீசரையும் இணைத்துள்ளார். மேலும் நாளை மறுதினம் அமேசான் பிரைம் வீடியோவில் கோல்ட் கேஸ் வெளியாகவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











