ராட்சசன், த்ரிஷ்யம் 2வை மிஞ்சியதா கோல்ட் கேஸ்.. பிருத்விராஜ், அதிதி பாலனின் படம் எப்படி இருக்கு?
திருவனந்தபுரம்: பிருத்விராஜ், அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோல்ட் கேஸ் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.
ராட்சசன், த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களின் வரிசையில் மற்றுமொரு கிரைம் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
கிரைம் த்ரில்லரில் அமானுஷ்யத்தையும் ஆவி அட்டகாசங்களையும் கலந்து சொல்லி இருக்கிற இந்த படம் ஹிட்டா? ஃபிளாப்பா? என இணையதள வாசிகள் சொல்லும் கருத்துக்களை இங்கே காண்போம்.

கோல்ட் கேஸ்
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், இயக்குநர் தானு பாலக் இயக்கத்தில் பிருத்விராஜ், அதிதி பாலன், லக்ஷ்மி பிரியா மற்றும் ஆத்மியா நடிப்பில் அமேசான் பிரைமில் இன்று கோல்ட் கேஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

நல்ல த்ரில்லர்
விமர்சகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பெரிதாக படம் இல்லை என்றும் வழக்கமான மலையாள கிரைம் படம் மாதிரியே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரசிகர் கோல்ட் கேஸ் படம் டிசன்ட் த்ரில்லர் என பாராட்டி உள்ளார்.

மண்டை ஓடு தான் கதை
குளத்தில் மீன் பிடிக்கும் போது மண்டை ஓடு ஒன்று கிடைக்க அதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிகர் பிருத்விராஜ் வருகிறார். அந்த மண்டை ஓடு யாரோடது என்பதை விசாரிப்பதில் ஏகப்பட்ட மர்மங்களும் தெரிய வருவதே படத்தின் கதை. ஆனால் படத்தின் கிளைமேக்ஸை இன்னும் நல்லா எடுத்து இருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

ஆவி தான் பிரச்சனை
ராட்சசன், த்ரிஷ்யம் 2 அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட அமானுஷ்யங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய வேகத் தடையாக உள்ளதாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. மற்றபடி ஆபாசம், கெட்டவார்த்தைகள் இல்லாத ஒரு நல்ல ஒடிடி படைப்பு என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவனுங்க சொல்ற அளவுக்கு இல்லை
விமர்சகர்கள் பழைய கதை என விமர்சிக்கும் அளவுக்கு இல்லை என்றும் பிருத்விராஜ் மற்றும் அதிதி பாலனின் அசத்தலான நடிப்பு படத்தை நல்லாவே கொண்டு சென்று இருக்கிறது. குறிப்பாக தேஜாவு போர்ஷன் எல்லாம் வேற லெவல். கிளைமேக்ஸ் பகுதி இன்னமும் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம். இவனுங்க சொல்ற அளவுக்கு எல்லாம் படம் வொர்ஸ்ட் இல்லை என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











