Cold Play மும்பை கான்செர்ட்.. டிக்கெட் புக்கிங்கிற்கு மொய்த்த ரசிகர்கள்.. க்ராஷ் ஆன Book My Show

மும்பை: லண்டனை சேர்ந்த இசை பேண்ட் Cold Play மும்பையில் கான்செர்ட் ஒன்றை அடுத்த வருடம் நடத்தவிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் கான்செர்ட் நடத்தவிருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கான்செர்ட்டுக்கான டிக்கெட் புக்கிங் புக் மை ஷோவில் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி ஏகப்பட்ட பேர் புக் மை ஷோ செயலிக்குள் போனதால் அந்த செயலி க்ராஷ் ஆகியிருக்கிறது.

லண்டனில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ராக் இசை பேண்ட் Cold Play. இதில் பியானிஸ்ட் க்ரிஸ் மார்ட்டின், கிட்டாரிஸ்ட் ஜானி பக்லாந்த், பேஸிஸ்ட் கை பெர்ரிமேன், ட்ரம்மர் வில் சாம்பியன் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த இசைக்குழுவுக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இசையை கேட்பதற்கு எப்போதும் ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஆவல் உள்ளது.

cold play book my show

யார் இந்த Cold Play: 1998ஆம் ஆண்டு வெளியான Safety என்ற ஆல்பத்தின் மூலம் கவனிக்கப்பட்ட அவர்கள்; 2000ஆம் ஆண்டு வெளியான பாராசூட்ஸ் என்ற ஆல்பத்திலிருந்து உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார்கள். பிறகு Yellow என்ற சிங்கிளை வெளியிட்டதற்காக சிறந்த பிரிட்டிஷ் ஆல்பம் என்ற விருது, கிராமி விருது உள்ளிட்டவைகளையும் பெற்று புகழின் உச்சிக்கு சென்றார்கள். அதற்கு பிறகு வரிசையாக பல ஆல்பங்களை அவர் வெளியிட்டு வருகிறார்கள்.

தொடர் கான்செர்ட்டுகள்: இவர்கள் வெளியிடும் ஆல்பத்துக்கு உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைப்பது வழக்கம். ஆல்பங்கள் வெளியிடுவது மட்டுமின்றி உலகத்தில் இருக்கும் பல நாடுகளுக்கு சென்று கான்செர்ட்டுகளை நடத்துவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் கான்செர்ட்டுக்கு இசை பிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தங்களது வரவேற்பை கொடுத்துவருகிறார்கள்.

இந்தியாவில் Cold Play: அந்தவகையில் இந்தியாவிலும் அவர்கள் கான்செர்ட் நடத்தியது உண்டு. கடைசியாக அவர்கள் 2016ஆம் ஆண்டு இங்கு கான்செர்ட்டை நடத்தினார்கள். அதற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். Global Citizen India festival என்ற பெயரில் நடந்த அதில் ரன்வீர் சிங், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மீண்டும் இந்தியாவில்: இந்நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து இந்தியாவில் மீண்டும் கான்செர்ட்டை நடத்தவிருக்கிறது Cold Play குழு. 2025ஆம் ஆண்டு ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீல் மைதானத்தில் கான்செர்ட் நடக்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அந்த கான்செர்ட்டுக்கான டிக்கெட் புக்கிங் இன்று புக் மை ஷோவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து டிக்கெட் புக் செய்வதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் செயலிக்குள் நுழைந்ததால் அந்த செயலியே க்ராஷ் ஆகியிருக்கிறது. இதன் காரணமாக ஆவலோடு இருந்த ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தியடைந்திருக்கின்றனர். டிக்கெட்டின் விலை 2,500 ரூபாயில் ஆரம்பித்து 12,500 ரூபாய்வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X