தளபதியை பார்க்காம இங்கே இருந்து போக மாட்டோம்.. நடிகர் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் திடீர் தர்ணா!

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரை பார்த்தே தீர வேண்டும் என சில ரசிகர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

நடுக்கடலில் Vijay-க்கு கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் | Oneindia Tamil

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் சினிமா பிரபலங்கள் வரை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிறந்தநாளன்று ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது.

விஜய் வீட்டின் முன்

விஜய் வீட்டின் முன்

சட்டப் பேரவை தேர்தலின் போது நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து அந்த பெரிய கேட் திறக்கப்பட்டதும் சைக்கிளில் சீறிப் பாய்ந்து வந்த விஜய்யின் வீடியோ வைரலானது. இந்நிலையில், நீலாங்கரை வீட்டில் உள்ள அதே கேட்டிற்கு முன்னதாக தளபதி ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் ஒரு கூட்டமாக கூடினர்.

விஜய்யை பார்க்க வேண்டும்

விஜய்யை பார்க்க வேண்டும்

வீட்டிற்கு முன் ஒன்று கூடிய ரசிகர்கள், தளபதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்றும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், நடிகர் விஜய் வெளியே வந்து தங்களை பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

திடீர் தர்ணா

திடீர் தர்ணா

ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கபடாத நிலையில் திடீரென ஆண்களும் பெண்களும் இணைந்து கொண்டு நடிகர் விஜய்யின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து கொண்டு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தளபதியை பார்க்காமல் இங்கிருந்து நகர மாட்டோம் என்றும் உறுதியாக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

விரட்டி விட்ட போலீஸ்

விரட்டி விட்ட போலீஸ்

தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் கொண்டு அப்புறப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டில் தான் இருந்தாரா? இல்லை வேறு இல்லத்தில் உள்ளாரா என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X