ஒரே கல்லூரியை சேர்ந்த பெண்கள்.. ஹவுஸ்ஃபுல் காட்சி.. வெற்றி நடை போடும் கமலி ஃப்ரம் நடுக்காவேரி!

சென்னை: விமர்சகர்களின் பாராட்டுக்களை அள்ளிய கயல் ஆனந்தியின் கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தை ஒட்டுமொத்த கல்லூரியும் ஒன்றாக சேர்ந்து பார்த்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்த படம் வெளியானது.

பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய இந்த படம் இன்னமும் தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படம் வேண்டாம்னு சொன்னாங்க

இந்த படம் வேண்டாம்னு சொன்னாங்க

கமலி ஃப்ரம் நடுக்காவேரி படம் ரிலீஸ் தொடர்பான பிரஸ் மீட்டின் போது பேசிய நடிகை கயல் ஆனந்தி இந்த படம் எல்லாம் ஏன் பண்றீங்க, வேண்டாம்னு சொன்னாங்க.. ஆனால், எனக்கு இந்த படத்தின் கதை மற்றும் கமலியின் கதாபாத்திரம் ரொம்பவே பிடித்துப் போனதால் யார் பேச்சையும் கேட்காமல் படம் பண்ணினேன் என்றார்.

விமர்சகர்கள் பாராட்டு

விமர்சகர்கள் பாராட்டு

கணக்குக்காக எடுத்த படமாக இருக்கும் என நினைத்துப் போய் இந்த படத்தை பார்த்த சினிமா விமர்சகர்கள், படத்தை பார்த்து விட்டு வியந்து போய் சொன்ன விமர்சனங்களால் மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் திருமணம்

சமீபத்தில் திருமணம்

இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவான அலாவுதினும் அற்புத கேமராவும் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய சாக்ரடீஸ் என்பவரை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் கயல் ஆனந்தி. சினிமா நட்சத்திரங்கள் யாரையும் அழைக்காமல், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இவரது திருமணம் நடைபெற்றது.

வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸ்

வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸ்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ், அஸ்வின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் சிறப்பான ரோலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் கயல் ஆனந்தி. கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தின் வெற்றியும் அவருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

கல்லூரி மாணவிகள் கூட்டமாக

கல்லூரி மாணவிகள் கூட்டமாக

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள பெரிசன் பிளாசா திரையரங்கில் பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஒட்டுமொத்தமாக வந்து ஒரு ஷோவையே புக் செய்து ஹவுஸ்ஃபுல் காட்சியாக கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தை கண்டு ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மாஸ்க் அணிந்திருக்கலாம்

மாஸ்க் அணிந்திருக்கலாம்

கொரோனா பரவல் இருக்கும் சூழ்நிலையில் கல்லூரி சார்பாக மாணவிகளை தியேட்டருக்கு அழைத்து வரும் போது ஐடி கார்ட் அளவுக்கு மாஸ்க் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தி இருக்கலாம். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த நிலையில், ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவிகள் மாஸ்க் அணியாமல் படத்தை பார்க்கும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா போயிடுச்சா பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X