twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன சொல்றீங்க...இவருக்கே காலேஜ் சீட் இல்லையா ?

    |

    சென்னை : தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன். திரையுலக மார்க்கண்டேயன் என புகழப்படும் சிவக்குமார் உச்ச நடிகராக இருந்த போதும், தனது வாரிசுகளை திரையுலகில் நுழைக்க அவர் முயற்சிக்கவில்லை. தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார்.

    சென்னையில் லயோலா கல்லூரியில் படித்த சூர்யாவும் சரி, வெளிநாட்டில் படித்த கார்த்தியும் சரி எதிர்பாராத விதமாக தான் ஹீரோ ஆயினர். அதிலும் கார்த்தி, டைரக்டர் ஆவதற்காகவே படித்தவர். ஆனால் இப்போ டாப் லிஸ்டில் இருக்கும் பிஸியான நடிகராகி விட்டார். சிவக்குமாரும் சரி அவரது மகன்களும் சரி திரைத்துறையில் முன்னணியில் இருந்தாலும் கிசுகிசுக்களில் அதிகம் அடிபடாதவர்கள்.

    கோடியில் ஒருவன் தெலுங்கு ட்ரைலரை வெளியிடும் நடிகர் ராணா... டைட்டில் வேற லெவல் போங்க ! கோடியில் ஒருவன் தெலுங்கு ட்ரைலரை வெளியிடும் நடிகர் ராணா... டைட்டில் வேற லெவல் போங்க !

    நீட் தேர்வை எதிர்க்கும் சூர்யா

    நீட் தேர்வை எதிர்க்கும் சூர்யா

    இவர்களில் சூர்யா, இரக்க மனம், தாராள குணம் கொண்டவர் என பெயர் வாங்கியவர். குறிப்பாக கல்விக்கு என்றால் தயங்காமல் உதவி செய்யக் கூடியவர். அகரம் என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி ஏராளமானோருக்கு கல்வி உதவி செய்து வருகிறார். மத்திய அரசின் நீட் தேர்விற்கு எதிராக மிக அழுத்தமாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.

    இவருக்கு சீட் இல்லையா

    இவருக்கு சீட் இல்லையா

    சூர்யா, லயோலா கல்லூரியில் படித்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சமீபத்தில் வீடியோ பேட்டி ஒன்றில் பேசிய சூர்யா, 1992 ல் லயோலா கல்லூரி நிர்வாகம் தனக்கு சீட் தர தயங்கியதாக தெரிவித்தார். ஏன் என சிவக்குமார் சென்று காரணம் கேட்ட போது, கோலிவுட் பிரபலங்களின் பிள்ளைகள் பலருக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதனால் சீட்களை நாங்கள் வீணடிக்க தயாராக இல்லை என கூறி உள்ளனர்.

     வாக்கு கொடுத்த சூர்யா

    வாக்கு கொடுத்த சூர்யா

    இதனால் சூர்யா, நான் பாதியில் விலக மாட்டேன். படிப்பை முடிப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். பிரபு, வெங்கடேஷ், விஜய் போன்றவர்கள் லயோலா கல்லூரியில் படித்தவர்கள் தான் என கூறிய சூர்யா, கல்லூரியில் படிக்கும் போது தான் என்ஜாய் செய்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். கல்லூரியில் படிக்கும் போது ஒருநாள் டிரிப்பாக புதுச்சேரி போனது, அடிக்கடி எத்திராஜ் பெண்கள் கல்லூரிக்கு போவது போன்றவைகளை ஜாலியாக தெரிவித்தார்.

    கிட்டார் கம்பி மேல நின்னு

    கிட்டார் கம்பி மேல நின்னு

    சூர்யா தற்போது கவுதம் மேனன் இயக்கும் நவரசா ஆந்திராலஜி வெப் சீரிசில் நடித்து வருகிறார். இதில் ஒன்றாக மணிரத்னம் இயக்கும் கிட்டார் கம்பி மேல நின்னு பாகத்தில் நடித்து வருகிறார். இது ஆகஸ்ட் 6 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து டி.ஜி.ஞானவேல் இயக்கும் ஜெய் பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

    சூர்யாவிற்காக காத்திருக்கும் படங்கள்

    சூர்யாவிற்காக காத்திருக்கும் படங்கள்

    எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் சிவக்குமார் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.

    English summary
    Speaking in a video interview, Surya said that in 1992, the Loyola College administration was reluctant to give him a seat. He got admission only after promising the management that he will complete the course and will not break in the middle of his studies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X