ஜன நாயகன் விஜய்க்கு மாஸான ட்ரிபியூட்.. அடடே காலேஜ் பசங்க பொண்ணுங்க கலக்குறாங்களே!
சென்னை: நடிகர் விஜய் சினிமா உலகிற்கு குட் பை சொல்லி விட்டார். அவரது கடைசி படமான ஜன நாயகன் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது. இப்படி இருக்கும்போது அவரது மெர்சல் படத்தில் இடம் பெற்ற பாடலான ஆளப்போறான் தமிழன் பாடலை கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் வகுப்பறையில் அமர்ந்து பாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். பாக்ஸ் ஆபீஸில் கிங்-ஆக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள விஜய், அதை சரியாக பயன்படுத்தி அரசியலில் கால் பதிக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார். இப்படி இருக்கும்போது, அவர் சினிமாவில் இருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
பலரும் விஜய் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படமாவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை எல்லாம் வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து வகுப்பறையில் உள்ள, இரும்பு டேபிளைத் தட்டி இசை அமைத்து, மெர்சல் படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பாடலான ஆளப்போறான் தமிழன் பாடலை பாடி உள்ளார்கள். இவர்கள் இவ்வாறு பாடும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதிக்கு ட்ரிபியூட்: மேலும் அவர்கள் வெகு சிறப்பாக பாடுகிறார்கள் என்று இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலர் தளபதிக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக இந்த வீடியோவை அவர்கள் உருவாக்கி இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் சிலர் ஏ.அர். ரகுமானுக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக கூட இந்த வீடியோவை அவர்கள் உருவாக்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இசை வெளியீட்டு விழா: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி அதாவது எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள். நடிகர் அஜித் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications