பார்வையாளர்களை கவர்ந்திழுக்க 2 மகாசங்கமங்கள்....அசத்தும் கலர்ஸ் தமிழ்

சென்னை : கலர்ஸ் தமிழ் சேனல், லாக்டவுன் சமயத்தில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பல முன்னணி தொடர்களை ஒன்றாக இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. அம்மன், மாங்கல்ய தோஷம் மற்றும் இதயத்தை திருடாதே , சில்லுனு ஒரு காதல் ஆகிய தொடர்களை ஒன்றிணைத்து இரண்டு பிரம்மாண்ட மகாசங்கமம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

Colors tamil channel planning to attract viewers and to broadcast 2 mahasangamams

பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பிற்கே கொண்டுவரும் வகையில் இவ்விரு நிகழ்ச்சிகளிலும் காதல், அன்பு, வெறுப்பு, மற்றும் பழிவாங்குதல் போன்ற பல்வேறு உணர்ச்சிமிக்க தருணங்கள் இடம்பெறவுள்ளன. இந்த மகாசங்கமம் நிகழ்ச்சிகளானது மே 10 தொடங்கி, திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகைகளும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுமான மகேஸ்வரி மற்றும் வைகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்ற இருக்கிறார்கள்.

இது குறித்து சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான மகேஸ்வரி கூறுகையில், "கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அம்மன் மற்றும் மாங்கல்ய தோஷம் ஆகிய 2 தொடர்களின் மகாசங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு த்ரிலிங்கான அனுபவத்தை தந்தது. இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவமாகும். நான் நடித்திருக்கும் சிறிய கதாபாத்திரமானது மகாசங்கமம் நிகழ்ச்சியில் மிகுந்த திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும். மேலும் எனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிக்கும்விதமாக இருக்கும்" என்றார்.

இது குறித்து நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான வைகா ரோஸ் கூறுகையில், "மீண்டும் நான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மகாசங்கமம் நிகழ்ச்சியான அம்மன் மற்றும் மாங்கல்ய தோஷம் ஆகிய தொடர்களில் இணைந்திருப்பது மிகவும் அற்புதமான அனுபவம் ஆகும். சம்பந்தப்பட்ட கதைக்களம் மற்றும் சிறந்த நடிகர், நடிகைகளுடன் நானும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொடர்களின் பார்வையாளர்கள் மகாசங்கமத்தில் எனது கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X