For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இனி ரசித்து ருசித்து சாப்பிடலாம்.. கலர்ஸ் தமிழின் ‘’கலர்ஸ் கிச்சன்’’ புதிய நிகழ்ச்சி ஆரம்பம் !

  |

  சென்னை: கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி 2020 நவம்பர் 7 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு கிழமை மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தனது புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பின் மூலம் உணவு ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தயார் நிலையில் உள்ளது.

  புகழ்பெற்ற சமையற்கலை விற்பன்னரான டாக்டர். செஃப் தாமு அவர்களது பங்கேற்போடு சுவையானதொரு சமையல் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நவம்பர் 7 ஆம் தேதியன்று முதன்முறையாக ஒளிபரப்பை தொடங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியானது, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  ரசித்து, ருசித்து உணவருந்தும் உணவு ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். இந்த நிகழ்ச்சியின் முதன்மை முகமாக டாக்டர் செஃப் தாமு இருக்கின்றபோது ஒரு சிறப்பு பிரிவினை செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத ஆர்.ஜே. ஸ்ரீரஞ்சனி தொகுத்து வழங்குகிறார்கள்.

  ரெசிப்பிக்களை பகிர்ந்துகொள்வது

  ரெசிப்பிக்களை பகிர்ந்துகொள்வது

  ஒவ்வொரு எபிசோடிலும் அற்புதமான சுவை கொண்ட உணவுகளை டாக்டர். செஃப் தாமு இந்த ஒளிபரப்பின் மூலம் உங்கள் வீடுகளுக்கே அவற்றை கொண்டு வருகிறார். இந்த ஒளிபரப்பின் மூலம் இந்த ரெசிப்பிக்களின் அடிப்படையில் வீட்டிலேயே இந்த உணவுகளை எளிதாக சமைத்து உண்டு மகிழலாம். 2010 ஆம் ஆண்டில் நீண்டநேரம் சமையல் செய்யும் மாரத்தான் போட்டியில் நீண்ட நேரம் ஒரு தனிநபராக சமைத்து, கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாக உருவாக்கியவரான, பிரபலமாக அறியப்படும் செஃப் தாமு, ஹோட்டல் மேலாண்மை கேட்டரிங் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற (பிஹெச்டி) முதல் இந்திய செஃப் என்ற பெருமைக்குரியவர். தனி முத்திரை பதித்த அவரது ரெசிப்பிக்களை பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி, தமிழ்நாடெங்கும் அவர் மேற்கொண்ட பயண கதைகளுக்குள்ளும் பார்வையாளர்களை அவர் நடமாட விடுகிறார்.

  பிடித்தமான உணவுகளை

  பிடித்தமான உணவுகளை

  மிகப்பிரபலமாக இருக்கும் மற்றும் அந்தந்த பிராந்தியத்திற்கே உரிய தனிச்சுவையான உணவு தயாரிப்புகளின் பின்புலத்தில் பயன்படுத்தப்படும் சில இரகசியமான உட்பொருட்கள் பற்றிய தகவல்களை அவர் வெளிப்படுத்துகிறார். சிறப்பு செலிபிரிட்டி விருந்தினர்கள் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சமைப்பது மற்றும் அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் உற்சாகம் மகிழ்ச்சியான தருணங்களையும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது.

  வழக்கத்தைவிட அதிகமாக

  வழக்கத்தைவிட அதிகமாக

  புத்துணர்வூட்டும் ஒரு வடிவத்தில் இந்த சமையல் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பேசிய கலர்ஸ் தமிழ் - ன் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன், "கொரோனோ தொற்றுப்பரவலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், வழக்கத்தைவிட அதிகமாக சமையலறையில் புகுந்து பல்வேறு உணவுகளை சமைத்துப்பார்க்க முயற்சிக்க ஊக்குவித்திருக்கிறது. பரிசோதனைகள், உற்சாகம் மற்றும் கேளிக்கை ஆகியவை நிகழும் ஒரு இடமாக சமையலறை புதிய வடிவம் பெற்றது. எமது பார்வையாளர்களின் சமையல் கலை பயணத்தில் அவர்களை இன்னும் ஊக்குவித்து, உத்வேகமூட்டும் ஒரு முயற்சியாக பிரபல செஃப் தாமு பங்கேற்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்

  சுவையுணர்வை தட்டியெழுப்பும்

  சுவையுணர்வை தட்டியெழுப்பும்

  கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு தனது இந்த ஒத்துழைப்பு உறவு குறித்து பேசிய செஃப் தாமு, "தமிழகத்தின் இளமையான, துடிப்பான சேனலுடன் இணைந்து செயல்படுவதும், ஒரு தனித்துவமான சமையல் நிகழ்ச்சியை எமது பார்வையாளர்களுக்கு வழங்குவதும் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரியமான, தனித்துவமான உணவுகள் மற்றும் சமையல் முறைகளை வெளிக்கொணர்ந்து, அவைகளுக்கு புத்துயிர் அளிப்பது மீதே எனது ஆர்வமும், விருப்பமும் அடங்கியிருக்கிறது. இந்த தனித்துவமான சமையல் முறைகள் மற்றும் சுவைகளை பலரும் அறியுமாறு செய்து அவற்றை கொண்டாடுவது பெருமகிழ்ச்சியளிக்கிறது. கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி இதன்மீது தான் சிறப்பு கவனம் செலுத்துகிறது. எமது பார்வையாளர்களுடன் சுவையுணர்வை தட்டியெழுப்பும் இப்பயணத்தில் இணைந்து பயணிப்பது குறித்து மட்டற்ற உற்சாகமும், மகிழ்ச்சியும் நான் கொண்டிருக்கிறேன்," என்று கூறினார்.

  செஃப் ஸ்ரேயா அட்கா

  செஃப் ஸ்ரேயா அட்கா

  பல பிரபல ஆளுமைகள் சமையற்கலைஞர்களாக புது வடிவமெடுத்து, அற்புதமான உ ணவுகளை தயார்செய்யும் நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. அவர்களது நண்பர்களோடும் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடும் கேளிக்கையான உணவு சவால்கள் போட்டியில் பங்கேற்பதும் இதில் உள்ளடங்கும். பார்வையாளர்கள் அவர்களது வீடுகளில் சமைக்கக்கூடியவாறு சில எளிதான, ஆரோக்கியமான ரெசிபிக்களை செஃப் ஸ்ரேயா அட்கா கற்றுத்தருவதும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

  பரபரப்பு மிக்க

  பரபரப்பு மிக்க

  செஃப் ஸ்ரேயா அட்கா, இது தொடர்பாக பேசுகையில், "கலர்ஸ் கிச்சன் என்ற பெயரில் தொடங்கப்படுகின்ற மிக ஆர்வமூட்டுகின்ற மற்றும் மகிழ்ச்சியளிக்கின்ற நிகழ்ச்சியில் இடம்பெறுவது குறித்து நான் பெரிதும் மகிழ்கிறேன். உணவின் வழியாக மக்களை மகிழ்விக்கும் அவர்களை திறனதிகாரத்தை ஏதுவாக்குவதும் எனது ஆர்வமூட்டும் செயல்பாடாக இருக்கிறது. இதுவரை நான் மேற்கொண்ட எனது சமையல்கலை பயணத்தில் இந்த வாய்ப்பு, மிகவும் பரபரப்பு மிக்க சாகச நிகழ்வாக நிச்சயம் இருக்கும் என்று கூறினார்.

  English summary
  Colors Tamil launch new programme 'Colors Kitchen'
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X