twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவராத்திரி குதூகல கொண்டாட்டம்.. உயிரோட்டமாக வழங்கும் கலர்ஸ் தமிழ் !

    |

    சென்னை: நலம் தரும் நவராத்திரி என்ற முற்றிலும் புதிய மினி-தொடர் வழியாக10 எபிசோடுகளை கொண்ட இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2020 அக்டோபர் 17 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு முதன்முறையாக தொடங்குகிறது.

    பண்டிகை காலத்தின்போது நேர்மறையான உணர்வுகளையும், அர்த்தமுள்ள பொழுதுபோக்கின் மகிழ்ச்சியை பரப்பவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை, நலம் தரும் நவராத்திரி என்ற ஒரு முற்றிலும் புதிய மினி சீரிஸை அறிமுகம் செய்கிறது.

    இதன்மூலம் தனது பார்வையாளர்களை கலாச்சார ரீதியில் தொடர்ந்து பிணைப்பினை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக இதை கலர்ஸ் தமிழ் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் பெரிதும் மதித்து கொண்டாடப்படுகின்ற நவராத்திரி திருவிழாவின் 9 நாட்கள் காலஅளவின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து சிறப்பான, தெளிவான தகவலை பிரபல பேச்சாளரும், எழுத்தாளரமான மிஸ். சுமதி ஸ்ரீ பகிர்ந்துகொள்ளும் சிறப்பு தொடர் நிகழ்வாக இது இருக்கும். 2020 அக்டோபர் 17 முதல், 26 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகின்ற ஒவ்வொரு எபிசோடும், பெண் தெய்வமான தேவியின் ஒன்பது அவதார வடிவங்கள் பற்றி சுவாரஸ்யமான புதினங்களை எடுத்துச்சொல்வதன் மூலம் இந்த தெய்வீக பயணத்தில் பார்வையாளர்களை பக்தியோடு அழைத்துச் செல்லும் என்று பல ப்ரோமோக்கள் மூலம் கலர்ஸ் தமிழ் சொல்லி வருகிறது

    ஓவர் நைட்டில் ஹீரோவான சுரேஷ் சக்கரவர்த்தி..யூ ஆர் கிரேட் சார் என பாராட்டும் ரசிகர்கள் !ஓவர் நைட்டில் ஹீரோவான சுரேஷ் சக்கரவர்த்தி..யூ ஆர் கிரேட் சார் என பாராட்டும் ரசிகர்கள் !

    விரிவாக விளக்கிக்கூறுவதாக

    விரிவாக விளக்கிக்கூறுவதாக

    இசை, ஒளிவிளக்குகள் மற்றும் வண்ணங்களின் இனிய கலவையாக திகழும் நவராத்திரி என்பது, தென்னிந்தியாவில் மிக முக்கியமான திருவிழாக்களுள் ஒன்றாகும். அழகான பொம்மைகளின் அற்புதமான காட்சிப்படுத்தலான கொலு என்பது, இந்த மகிழ்ச்சிகரமான பக்தி நிறைந்த விழாவின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாகும். கலர்ஸ் தமிழால் புதிதாக ஒளிபரப்பப்படும் இந்த மினி தொடர், அதன் 10 எபிசோடுகளிலும் இந்த கொண்டாட்டத்தின் உண்மையான சாரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. கொண்டாட்டத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிலும், பார்வையாளர்களின் முழுகவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த கொண்டாட்டத்தோடு தொடர்புடைய பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று பின்னணி பற்றி பல்வேறு பயனுள்ள தகவல்களை மிஸ். சுமதி ஸ்ரீ பகிர்ந்துகொள்கிறார். ஒரு அறிமுகத்தோடு தொடங்கும் இந்த எபிசோடுகள், ஒவ்வொரு நாளின் நிறம், மலர்கள், பிரார்த்தனைகள், பிரசாதங்கள் மற்றும் இசை ராகங்கள் என தேவியின் ஒவ்வொரு வடிவத்திற்கும் பிரத்யேகமான அம்சங்களுக்கு பின்னணியில் உள்ள தொன்மங்கள் மற்றும் பாரம்பரியங்களை விரிவாக விளக்கிக்கூறுவதாக இருக்கும்.

    தீமையின்மீது நன்மை

    தீமையின்மீது நன்மை

    கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், இந்த சிறப்பு தொடர் பற்றி பேசுகையில், "புதுமையான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்க நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரத்தை அடையாளம் காட்டி அங்கீகரிக்கின்ற கதைசொல்லல் மீது சிறப்பு கவனம் செலுத்துவதில் கலர்ஸ் தமிழில் உள்ள நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சமயப்பற்று மற்றும் நம்பிக்கையின் ஒரு குறியீட்டு பிரதிநிதித்துவ நிகழ்வாக நடத்தப்படும் நவராத்திரி திருவிழா என்பது, தீமையின்மீது நன்மை வெற்றி காண்பதனை பிரதிபலிக்கிறது.

    தெய்வீக அனுபவத்தை

    தெய்வீக அனுபவத்தை

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த மினி தொடரின் வழியாக, உலகெங்கிலும் உள்ள எமது ரசிகர்களுக்கு, பிறவற்றிலிருந்து வேறுபட்டு, தனித்துவமான அம்சங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் நாங்கள் மகிச்சியடைகிறோம். உலகையே அச்சுறுத்துகின்ற பெருந்தொற்று நிலவும் இக்காலகட்டத்தில் மிக அதிகமாக தேவைப்படுகின்ற பக்தி சார்ந்த உயிரோட்டமான, தெய்வீக அனுபவத்தை வழங்குவது மீது இது எங்களது எளிமையான முயற்சியாகும். இந்த பண்டிகைக்காலத்தின் செழுமையான, பாரம்பரியமான நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையையும் மற்றும் சமயப்பற்றையும் இன்னும் உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகவும் இது இருக்கிறது. இந்த தெய்வீக அனுபவமானது, எமது ரசிகர்களுக்கு நேர்மறையான உணர்வையும், நம்பிக்கையையும் இன்னும் அதிகமாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.

    முக்கியமான திருக்கோவில்கள்

    முக்கியமான திருக்கோவில்கள்

    ஒன்பது நாட்களின்போது, தேவியின் ஒன்பது வடிவங்களின் முக்கியத்துவம் மற்றும் வழிபடும் முறைகள் பற்றி விளக்கி ஒரு அழகான ஆன்மீக அனுபவத்தில் இந்த தொடரானது, பார்வையாளர்களை அழைத்துச்செல்லும். நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் பின்பற்றப்படும் பல்வேறு சடங்குகளையும் இது பின்பற்றும். இத்தொடரின் இறுதி எபியோடு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் ஆலயம் பற்றிய செய்திகளை தாங்கி வரும் மற்றும் இத்திருக்கோயிலில கொண்டாடப்படும் மிகப்பிரமாண்டமான நவராத்திரி கொண்டாட்டங்கள் பற்றிய சிறப்பு பார்வையை ரசிகர்களுக்கு வழங்கும்.

    கோடிக்கணக்கான மக்கள்

    கோடிக்கணக்கான மக்கள்

    இவைகளோடு சேர்த்து, தமிழ்நாடெங்கும் தேவிக்கு அமைந்திருக்கின்ற முக்கியமான திருக்கோவில்கள் மற்றும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது அங்கு மேற்கொள்ளப்படும் பிரத்யேக பாரம்பரிய நடைமுறைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களையும் எடுத்தியம்பும். வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.

    English summary
    Colors Tamil provide : Navarathri Celebration
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X