twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் சுதந்திர தின கொண்டாட்டம்..என்னென்ன படம் ஒளிபரப்பாகும்னு தெரியுமா?

    |

    சென்னை : 75வது சுதந்திர தினத்தை ஒட்டி மக்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் ஆகஸ்ட் 15ந் தேதி அன்று பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

    காலை 8.30 மணிக்கு ஜோதிடர் மகேஷ் ஐயரின் நலம் தரும் ஆவணி மாதம் நிகழ்ச்சியுடன் தொடங்கும் சுதந்திர தின நிகழ்ச்சி தொடர்ந்து 9.30 மணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தலைமை ஏற்று நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு பல்வேறு திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளன.

    ஆகஸ்ட் 15-ந்தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்.

    விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

     பட்டிமன்றம்

    பட்டிமன்றம்

    புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் நடுவராக பங்கேற்கும் நகைச்சுவை மிக்க சிறப்பு பட்டிமன்றத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பாண்டியராஜன், தம்பி ராமையா, சிங்கம்புலி, வசந்த பாலன் மற்றும் பேரரசு ஆகியோர் இன்றைய சினிமா முழு சுதந்திரத்துடன் எடுக்கப்படுகிறதா? இல்லை கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளோடு எடுக்கபடுகிறதா? என்ற தலைப்பில் சூடான விவாதம் நடத்த இருக்கிறார்கள். இந்த பட்டிமன்ற நிகழ்ச்சியை வசந்த் அண்ட் கோ ஆடி அதிரடி தள்ளுபடி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் குமரன் பிராண்ட் கருவாடு ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

    20 ஆண்டு திரைப்பயணம்

    20 ஆண்டு திரைப்பயணம்

    இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கெளதம் வாசுதேவ் மேனன் இந்திய சினிமாவில் 20 ஆண்டு பயணத்தை போற்றும் விதமாக சினிமா துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை வசந்த் அண்ட் கோ ஆடி அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. 2 மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்கள் கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சிட் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மென் இன் பிளாக் II

    மென் இன் பிளாக் II

    மேலும் 12 மணிக்கு முதல் முறையாக நடிகர்கள் வில் ஸ்மித் மற்றும் டாமி லீ ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான மென் இன் பிளாக் II திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளிவந்த அறிவியல் புனைக்கதை ஆங்கில திரைப்படத்தின் தமிழ் தழுவலான மிகமிக அவசரம் படம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

    நகைச்சுவை திரைப்படம்

    நகைச்சுவை திரைப்படம்

    அதனைத் தொடர்ந்து 4 மணிக்கு அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த 'ஹாஸ்டல்' நகைச்சுவை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த இளம்பெண் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பதே இப்படத்தின் கதையாகும். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு காமெடி நடிகர் சந்தானம் நடித்த சபாபதி திரைப்படமும், இரவு 9:30 மணிக்கு நடிகை ராய் லட்சுமி நடித்த திகில் திரைப்படும் சிண்ட்ரால்லா ஒளிபரப்பாக உள்ளது.

     மகிழ்ச்சி அடைகிறோம்

    மகிழ்ச்சி அடைகிறோம்

    சுந்தந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தக பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், சுதந்திரம் என்பது விடுதலையின் மகத்துவத்தையும் உணர்வையும் வரையறுக்கிறது. இதுபோன்ற முக்கியமான சிறப்புமிக்க நாட்களில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பொழுதுபோக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் வழங்குவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

    English summary
    Colors Tamil Television, 75th Independence Day, 75th Independence Day special program, K Bhagyaraj Pattimandram,Gautam Vasudev Menon 20 years of cinima,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X