twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் கலர்ஸ் தமிழின் நெடுந்தொடர்கள்!

    |

    சென்னை : தொலைக்காட்சி தொடர்கள் மக்களை முட்டாளாக்கும் அம்சங்களில் ஒன்றாக மாறி வருகிறது. முன்பெல்லாம் பெண்களை அழ வைக்கிறது என்று கூறி வந்த நிலையில், தற்போது பெண்களை கோமாளிகளாக மாற்றும் வகையில், தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்த குறைபாடுகள் இல்லாத, மக்களை எண்டர்டெயின் பண்ணுவதோடு, அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு, நெடுந்தொடர்களில் பலவித மாற்றங்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மேற்கொண்டிருக்கிறது.

    வட இந்தியாவில் புகழ் பெற்ற குழுமத்தின் ஒரு அங்கமான கலர்ஸ் தொலைக்காட்சி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கலர்ஸ் தமிழ்' என்ற பெயரில் அறிமுகமானது. அதில் இருந்து தமிழக ரசிகர்களுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும், என்ற உத்வேகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருவதோடு, மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களோடு போட்டி போடும் வகையிலும், அவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தொடர்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    Colors Tamil to make people think intelligently

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்றாலே தனித்துவத்தோடு இருப்பது போல, நெடுந்தொடர்களையும் தனித்துவத்தோடு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், 'தறி', 'திருமணம்', 'பேரழகி', 'மலர்', 'மைனா' என வித்தியாசமான தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இந்த அத்தனை நெடுந்தொடர்களும், ஒவ்வொன்றும் ஒரு விதம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்களாகும்.

    அசுர வேட்டை நடக்குது.. அசுரன் 50ம் நாள் கொண்டாட்டம்!அசுர வேட்டை நடக்குது.. அசுரன் 50ம் நாள் கொண்டாட்டம்!

    புதிய முயற்சியாக ஒளிபரப்பாகும் 'தறி' தொலைக்காட்சி தொடர்களில் இதுவரை சொல்லப்படாத கதையாக, தறி நெய்யும் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விவரிக்கிறது. இக்கதையில் வரும் முதன்மை கதாபாத்திரம் அன்னலட்சுமி தறி நெய்யும் குடும்பத்தை சேர்ந்தவள். இவள் தனது தங்கை வாணி ராமசாமியுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறாள். அன்னலட்சுமி தனது பாரம்பரிய தொழிலான தறி நெய்தலை தக்க வைக்க பல போராட்டங்களை சந்திக்கிறாள். இவளின் சவால் மிக்க கதாபாத்திரம் தறி நெய்யும் எதார்த்த குடும்பத்தின் கஷ்டங்களை எடுத்து கூறும் வகையில் இருக்கிறது.

    Colors Tamil to make people think intelligently

    கலர்ஸ் தமிழின் மற்றொரு தொடரான 'திருமணம்' ரொமான்டிக், அதே சமயம் புதுமை படைப்பு என்று சொல்லலாம். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் சந்தோஷ், ஜனனி ரியல் டைம் கெமிஸ்ட்ரி உண்டாக்கி இருக்கிறாங்கள். சந்தோஷ் வேறு ஒரு பெண்ணை காதல் செய்ய அவனின் பெற்றோர்கள் அதை மறுத்து ஜனனியுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சந்தோஷ், ஜனனியிடம் கோவத்தை காட்டி ஒரு நாள் விவாகரத்து கேட்கிறான். இதை ஜனனி எப்படி கடந்து வர போகிறாள் என்பதே கதை. இந்த தொடர் ரசிகர்களின் பேவரைட் தொடர்களில் முதலிடத்தில் உள்ளது.

    Colors Tamil to make people think intelligently

    பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களைஆச்சரியமூட்டும் வகையிலும் ஒளிபரப்பாகும் தொடர் 'பேரழகி'. வழக்கமான குடும்ப கதை இல்லாமல் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதை. இக்கதையின் நாயகியின் நிறம் கருப்பு என்பதால் பல கஷ்டங்களை சந்திக்கிறாள். இவளின் கனவு தமிழ் திரை உலகில் நடிகை ஆவது. பல அவமானங்களை தாண்டி அவள் சாதித்தாளா என்பதே கதை.

    Colors Tamil to make people think intelligently

    வித்தியாசமான தொடராக ஒளிபரப்பாகிறது 'மலர்'. கதிருக்கும், மலருக்கும் திருமணமாகிறது. திருமணத்துக்கு மூன்று வருடம் முன்பு மலர் தன்னை தாக்க வந்தவனை கொலை செய்கிறாள். அந்த கொலை வழக்கை கையாளும் கதிரை திருமணம் செய்துள்ள நிலையில், தன்னை எப்படி காக்கிறாள் என்பதே கதை.

    அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் தொடர்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ், குழந்தைகளுக்கான தொடராக 'மைனா' என்ற தொடரையும் ஒளிபரப்புகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மைனா வறுமையின் காரணமாக பணபலமும் ஆள்பலமும் உள்ள சிங்கப் பெருமாளிடம் குழந்தை தொழிலாளியாக வேலை செய்கிறாள். ஒரு கட்டத்தில் சிங்கப் பெருமாளை எதிர்த்து, அவர்களின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வர துடிக்கும் மற்றொரு தன்னம்பிக்கை பெண்.

    Colors Tamil to make people think intelligently

    எதையும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை விவரிக்கும் ஒரு தொடராக 'ஓவியா' ஒளிபரப்பாகிறது. வெவ்வேறு வாழ்க்கை பின்னணியை கொண்ட இரண்டு பெண்களின் மனநிலையும், அவர்களது லட்சியமும் அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் தான் இந்த தொடரின் கதை. மேற்படிப்பு கனவு காணும் ஏழ்மையான பெண், தான் நினைத்ததை செய்து முடிக்கும் குணம் கொண்ட பணக்கார பெண், இவர்களின் பயணம் தான் கதை.

    Colors Tamil to make people think intelligently

    நெடுந்தொடர்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் கலர்ஸ், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விஷயத்திலும் புதுமையை கையாண்டிருக்கிறது. அதன்படி, அனைத்து தொடர்களிலும் புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சினிமாவில் நல்ல அனுபவம் உள்ளவர்களை அழைத்து தயாரிப்பாளர் ஆக்கியிருப்பதோடு, பலரை நடிக்கவும் வைத்திருக்கிறது. அதனால், கலர்ஸ் தமிழின் முயற்சி மட்டும் புதிதல்ல, முகங்களும் புதிதாகவே இருக்கிறது.

    English summary
    Television series is becoming one of the most foolish people. Women have been called clowns before, but now women are clowns, In a nutshell, the television series is airing. But, without these flaws, The aim is to educate people and make them think intelligently. Colors Tamil Television has made many changes in the series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X