பூவே பூச்சூடவா ரேஷ்மா… கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் இணைந்தார்!
சென்னை : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மதனும் , ரேஷ்மாவும் இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொழுதுபோக்கு
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சுவாரசியமான பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது.

புது சீரியல்
மேலும்,புதுப்புது திரைப்படங்களை ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சி என்ற வரிசையில் போட்டி போட தயாராகி வருகிறது. இதன் முதன் முயற்சியாக பிரபலமான நடிகர்கள் நடித்த 'அபி டெய்லர்' என்ற புது சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

இரவு 10 மணிக்கு
இந்த சீரியல் திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் , வாழ்க்கையில் உயரத்துடிக்கும் இளம் பெண் கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்துள்ளார். இவர் அபி டெய்லர் என்ற கடையை நடத்தி தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
Recommended Video

மோதல், காதல்
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் அதிபராக மதன் பாண்டியன் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அபிக்கும் அசோக்கிற்கும் அவ்வப்போதும் நடக்கும் சண்டையும், மோதலும், பின் காதலும் இக்கதையை வரும் வாரங்களில் மேலும் சுவாரசியமாக்கும் என்று தெரிகிறது.

விரைவில் திருமணம்
ரேஷ்மா ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும், மதனும் , ரேஷ்மாவும் காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











