கலர்ஸ் தமிழ் வழங்கும் "சிந்தனைகள் சிம்பிளிஃபைடு" புத்தம் புதிய ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்ச்சி!

சென்னை : தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் பல்வேறு புத்தம் புதிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

Recommended Video

அழகிய TV SISTERS |ANCHOR DHEEPTHI CHAT | FILMIBEAT TAMIL

இந்நிலையில் தற்போது ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்கும் சிந்தனைகள் சிம்பிளிஃபைடு என்ற புத்தம் புதிய ஆன்மீக நிகழ்ச்சி அறிமுகமாகியுள்ளது.

வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கலந்துரையாட உள்ளனர்.

புதிய ஆன்மீக நிகழ்ச்சி

புதிய ஆன்மீக நிகழ்ச்சி

உலகிலேயே ஆன்மீகத்தை மிகவும் போற்றும் நாடுகளில் முதன்மையானது இந்தியா, அவ்வாறு நமது நாட்டின் பெருமையான ஆன்மீகத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது கலர்ஸ் தமிழ் புத்தம் புதிய ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்பி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு

பிரபல ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்ப படுகிறது. ஆகஸ்டு 23 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஆர்ட் ஆஃப் லிவ்விங் அறக்கட்டளையின் ஒத்துழைப்போடு உரையாடல் அடிப்படையிலான டாக் ஷோ ஆகும்.

மனம்திறந்து உரையாட

மனம்திறந்து உரையாட

இதயத்திற்கு இதயம் உரையாடுகின்ற உத்வேகத்தை உணர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் சிந்தனைகள் சிம்பிளிஃபைடு என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தமிழ் ஆளுமைகளோடு இந்நிகழ்ச்சியில் மனம்திறந்து உரையாட இருக்கின்றனர்.

நேர்மையான சிந்தனைகளை

நேர்மையான சிந்தனைகளை

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அனைவரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படும் குடும்பம், அன்பு, காதல், வெற்றி, உடல்நலம், மனநலம், ஆன்மீகம் சிரமமான நேரங்களில் நம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை குறித்து நேர்மையான மற்றும் சிந்தனைகளை அந்த நிகழ்ச்சியின் மூலம் வழங்கி வருகிறார்.

நல்லதொரு உரையாடலின்

நல்லதொரு உரையாடலின்

ஆகஸ்ட் 23-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் பிரபல நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் மற்றும் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்வமூட்டும் நல்லதொரு உரையாடலின் மூலம் அனைவரையும் கவர்ந்து இருந்தனர்.

அடுத்தடுத்து எபிசோடுகளில்

அடுத்தடுத்து எபிசோடுகளில்

இந்நிலையில் அடுத்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரபல தமிழ் பிரபலங்களான லட்சுமி ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌதம் மேனன், ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே என அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் கலந்துகொண்டு உரையாட உள்ளனர்.

60 நிமிடங்களை

60 நிமிடங்களை

தமிழ் மேட்ரிமோனி நிறுவனம் வழங்கும் கலர்ஸ் தமிழில் முதன் முதல் டாக் ஷோ நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்பிளிஃபைடு 60 நிமிடங்களை கொண்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து பயன்பெறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X