கோமாளி பட நடிகருக்கு இந்த நிலைமையா?.. கூந்தல் இல்லை, கவர்ச்சி இல்லை என புலம்பி தள்ளிட்டாரே.. ஏன்?
சென்னை: Temple Monkeys யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ஷா ரா. சிவ சரவணன் என்கிற தனது பெயரை யூடியூபில் டிரெண்டாக ஷா ரா என மாற்றிக் கொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, நட்பே துணை, கோமாளி, நான் சிரித்தால், சூப்பர் டூப்பர், ஆக்ஷன், ஓ மை கடவுளே, டிக்கிலோனா, டைரி, வாத்தி, பல்லு படாம பாத்துக்க, சொப்பன சுந்தரி, அநீதி, தி பாய்ஸ், டபுள் டக்கர், மின்மினி, கடைசி உலகப் போர் கடைசியாக கடந்த ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான தணல் என பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் பெரிய பட வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராமில் எவ்வளவு ஃபாலோயர்ஸ் வச்சிருக்கன்னு கேட்கிறாங்க என புலம்பியபடி இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துணை நடிகர்களுக்கு துக்கம்: சினிமாவில் முன்னணி நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஜாலியாக இருந்து வரும் நிலையில், துணை நடிகர்கள் இவரை போல துக்கத்துடன் தான் துவண்டு வருகின்றனர். இயக்குநராக சாதித்தால் தான் சினிமாவில் சம்பளம். உதவி இயக்குநர்கள் எல்லாம் பணத்தை பார்க்கவே முடியாத நிலை உள்ளதை போல துணை நடிகர்களுக்கும் அள்ளிக் கொடுக்காமல் கிள்ளி தான் கொடுக்கின்றனர். காமெடி நடிகராக கலக்கிய ஷா ராவுக்கே இப்போ சினிமா வாய்ப்பு இல்லையா? என ஷாக் ஆகும் அளவுக்கு அவரது வீடியோ வெளியாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் வேண்டும்: சமீப காலமாக சினிமாவில் நடிகர்களை தாண்டி இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் அதிகம் தோன்றி வரக் காரணமே அவர்களுக்கு இருக்கும் அதிக ஃபாலோயர்கள் தான் என்கின்றனர். வடிவுக்கரசி முதல் பல பிரபலங்கள் இதுகுறித்து பேசியுள்ள நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் இருந்தால் தான் சினிமா சான்ஸ் கிடைக்கும் என்றும் அதிகாலை 4 மணிக்கு தூக்கம் தெளிந்து சுற்றிக் கொண்டிருக்கிறேன், எப்படி இன்ஸ்டா ஃபாலோயர்களை அதிகரிப்பது என தெரியவில்லை என புலம்பியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
எனக்கு கூந்தல் இல்லை: மீசையை முறுக்கு, கோமாளி படங்களில் காமெடி நடிகராக கலக்கிய ஷா ரா தற்போது தனக்கு கூந்தல் இல்லையே, நெஞ்சு பூரா முடி இருக்கு, கவர்ச்சி இல்லையே, எப்படி இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸை ஏத்துவேன், எப்படி சினிமா வாய்ப்பை பிடிப்பேன், ஏதாவது ஐடியா இருந்தா கொடுங்கடா என வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பிரபல சினிமா நடிகர்களுக்கே இந்த நிலைமையா? என்றும் இதுவே நல்ல ஐடியா தான் பாஸ் தினமும் ஒரு வீடியோ இப்படி புலம்பிப்போட்டாலே டிரெண்ட் ஆகிடுவீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











