twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிரெய்லரில் ரஜினியை கலாய்த்தது ஏன்?.. கோமாளி பட இயக்குனர் விளக்கம்.. ஆனா ஏத்துக்குற மாதிரி இல்லையே!

    ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தற்கான காரணத்தை கோமாளி பட இயக்குநர் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    Comali Trailer Review : Director Troll Rajini : ஒரு Scene மட்டும் நீக்க வேண்டும்- வீடியோ

    சென்னை: கோமாளி டிரெய்லரில் ரஜினியை கலாய்த்தது ஏன் என அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை மாலை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

    கோமாளி டிரெய்லர்:

    கோமாளி டிரெய்லர்:

    அதில் 16 வருடங்கள் ஜெயம் ரவி கோமாவில் இருந்து மீண்டெழுகிறார். அவரது நண்பன் யோகி பாபு, அந்த 16 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஜெயம் ரவிக்கு உணர்த்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகள் வீடுகளாக மாறியது, கலாச்சாரம், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என இந்த உலகின் மாற்றங்களை கலாய்த்த வண்ணம் இருவரும் பயணிக்கிறார்கள்.

    கமல் கோபம்:

    கமல் கோபம்:

    டிரெய்லரின் முடிவில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் கோமாளிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகர் கமல், தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு போன் செய்து, இந்த விவகாரம் குறித்து வருத்தப்பட்டார்.

    இயக்குநர் விளக்கம்:

    இயக்குநர் விளக்கம்:

    இந்நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ரஜினியை கலாய்த்தது ஏன் என விளக்கம் அளித்தார். அப்போது, "90'ஸ் கிட்ஸ் இந்தப் படத்தை மிகவும் ரசித்து பார்ப்பார்கள். பார்வையாளர்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். நான் பயங்கர ரஜினி ரசிகன். லிங்கா படம் வெளியான போது பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். அவர் சீக்கிரம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் காட்சியை படத்தில் வைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

    மன்னிப்பு:

    மன்னிப்பு:

    எனினும் கோமாளி படத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இப்படி கலாய்த்திருப்பதால், பிரதீப் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ஒரு ரசிகராக இருந்துகொண்டே, தலைவரை இப்படி கலாய்க்கலாமா என்பதே அவர்களது கேள்வி. இந்த விவகாரத்தில் இயக்குனர் பிரதீப் மன்னிப்பு கேட்பதுடன், சம்மந்தப்பட்ட காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதே அவர்களது வலியுறுத்தலாக உள்ளது.

    English summary
    Director Pradeep Ranganathan explains that he is a Rajini fan and he wants Rajini to enter politics soon. So only he kept that scene in Comali movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X