அப்பாவுக்கு ஹேர்கட்.. கோமாளி பட இயக்குனரின் இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : கோமாளிப்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன் அப்பாவுக்கு முடிவெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ நபர்கள் உழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரு சேர படமாக வழங்குவது என்பது இயக்குனரின் கையில்தான் உள்ளது. அப்படிப்பட்ட இயக்குனர்கள் மிகவும் கடின உழைப்போடுதான் சினிமாவிற்கு வருகிறார்கள். ஆனால் உதவி இயக்குனராக இருந்தால் மட்டுமே இயக்குனராக முடியும் என்ற காலம் சென்றுவிட்டது.

ஒரு திரைப்படம் எடுக்க போதுமான திறமை இருந்தால் போதும் யாரிடமும் உதவி இயக்குனராக இருக்க வேண்டும் என்பதில் அவசியம் இல்லை என்று நிரூபித்தவர் கோமாளி எனும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் பல புது முக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில் இவரும் ஒரு வெற்றி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு போன்றவர்கள் நடித்து பெரிய வெற்றி கண்ட திரைப்படம்தான் கோமாளி. இந்த திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், குறும்படங்கள் மட்டுமே எடுத்து தனது முதல் பட வாய்ப்பை பெற்றார்.

தனது முதல் திரைப்படத்தை மிகப் பெரிய வெற்றித் படமாக்கிய இவர் குழந்தைகளிடமும் இந்த படத்தை கொண்டு சேர்க்க அவர் தவறவில்லை. பல குழந்தைகளின் கவனத்தை ஈர்த்தது இந்த படம். இதுமட்டுமின்றி இந்த படத்தின் 100 நாள் விழாவிற்கு தமிழக முதலமைச்சர் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தன் தந்தைக்கு முடி வெட்டி விட்டு அழகு பார்த்துள்ளார். பல பிரபலங்கள் தங்கள் வீட்டில் செய்யும் சேட்டைகளை பதிவிட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து இவரும் தன் அப்பாவிற்கு முடி வெட்டி விடுவதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











