ஜி.வி. பிரகாஷின் அடுத்த படத்தின் கதை இதுதான்.. போட்டுடைத்த கோமாளி பட இயக்குநர்.. என்ன கதை தெரியுமா?
சென்னை: கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ஷார்ட் பிலிம் கதையில் தான் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடிக்க உள்ளார் என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
குறும்படங்களையும் இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன், கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான முதல் படமே இண்டஸ்ட்ரி ஹிட்டாக முன்னணி இயக்குநர்கள் வரிசையில் பிரதீப் ரங்கநாதனுக்கு சீட் கிடைத்துள்ளது.
ஹைவே காதலி
குறும்பட இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஹைவே காதலி என்கிற ஷார்ட் பிலிமில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அந்த குறும்படம் தற்போது ஜி.வி. பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் படமாக உருவாகப் போகிறது என்ற அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிகில் தென்றல்
அந்த குறும்படத்தில் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்துள்ளது நம்ம பிகில் படத்தில் தென்றலாக நடித்து அசத்திய அம்ரிதா அய்யர் தான். படை வீரன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இந்த குறும்படத்தில் அம்ரிதா அய்யர் நடித்துள்ளது, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
கோமாளி படத்தில் ஜெயம் ரவி தான் நடத்தும் யூடியூப் பக்கத்திற்காக என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பல கேள்விகளை எழுப்புவார். அதே பாணியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை வீடுகளில் பிரதமர் மோடி விளக்கேற்ற சொன்னால், பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியதை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என ட்வீட் போட்டு பிரதீப் ரங்கநாதன் கேட்டுள்ளார்.
அப்பா லாக்
இந்த குவாரண்டின் காலத்தில் தனது பழைய நினைவலைகளை தட்டி எழுப்பி, தனது ரசிகர்களுக்கு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சமூக வலைதளங்கள் வாயிலாக என்டர்டெயின் செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக பலரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், 2017ம் ஆண்டு, பிரதீப் நடிப்பில் வெளியான அப்பா லாக் என்ற குறும்படம் தற்போதைய நிலையை அப்போதே படம் பிடித்து காண்பிப்பதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











