சக்தி பிறந்திருக்கிறாள்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பாவான கோமாளி பட நடிகர்.. குவிகிறது வாழ்த்து!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஷா ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

டெம்பிள் மங்கிஸ் எனும் யூடியூப் சேனல் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஷா ரா.

ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக மகள் பிறந்த சந்தோஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யூடியூப் டு சினிமா

யூடியூப் டு சினிமா

விஜய் வரதராஜ் உடன் இணைந்து இவர் நடத்திய டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. மாநகரம் படத்தில் சின்ன ரோலில் நடித்த ஷா ராவுக்கு ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

காமெடி நடிகராக கலக்கிய ஷா ரா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாகவே நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், நட்பே துணை, கோமாளி, சூப்பர் டூப்பர், ஆக்‌ஷன், நான் சிரித்தால் என ஏகப்பட்ட படங்கள் ஷா ராவுக்கு வரிசைக் கட்டி வந்தன.

கோமாளி படத்தில்

கோமாளி படத்தில்

ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் சம்யுக்தா ஹெக்டேவின் கணவராக நடிகர் ஷா ரா நடித்து அசத்தி இருப்பார். ஓ மை கடவுளே படத்திலும் ஷா ரா சூப்பரான ரோலில் நடித்து கலக்கி இருப்பார்.

சக்தி பிறந்திருக்கிறாள்

சக்தி பிறந்திருக்கிறாள்

ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக நடிகர் ஷா ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சக்தி மகளாக பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்" என தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் ஷா ராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் ஷா ரா என்றும், கொரோனா காலத்தில் மிகுந்த கவனத்துடன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X